தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணன் கைது!

தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணன் கைது!

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து நேற்றிரவு (மார்ச் 6) டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அவரை கைது செய்தது.

முன்னதாக, முன்ஜாமீன் கோரி அவா் தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தேசிய பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்கமைப்பு வாரியம் (செபி) புகாா் தெரிவித்தது. மேலும் சித்ரா முறைகேடான வழியில்  ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாக நியமித்ததாக புகாா் எழுந்தது. இந்நிலையில் தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களை ஆனந்த் சுப்ரமணியன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு  முறைகேடாக அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், என்எஸ்இ-யின் கணினி சேமிப்பக (சா்வா்) கட்டமைப்பை சித்ரா ராமகிருஷணன் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது 2018-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் சித்ராவிடம் சிபிஐ அதிகாரிகள் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினா். அவரது வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணையின்போது சித்ரா, தான் இமயமலை சாமியார் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டதாகவும், அவரி நேரில் சந்தித்ததில்லை என்றும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார். அதைத் தவிர்த்து மேறெந்த தகவலும்தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் சித்ரா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிபிஐ விசாரணையின்போது மூத்த மனநல மருத்துவரின் உதவியையும் சிபிஐ அதிகாரிகள் பயன்படுத்தினா். அப்படியும் சித்ரா சரிவர பதிலளிக்காததால் அவரை நேற்றிரவு கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com