சர்வதேச மகளிர் தினம்; மத்திய பிரதேசத்தில் டிராபிக் கட்டுப்படுத்த பெண் காவலர்கள் பணி!

சர்வதேச மகளிர் தினம்; மத்திய பிரதேசத்தில் டிராபிக் கட்டுப்படுத்த பெண் காவலர்கள் பணி!

நாளை ( மர்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மத்தியப் பிரதேசத்தில் போக்குவததைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநிலம் முழுவதும் பெண் காவலர்கள் பணியமர்த்தப் படுவார்கள். இம்மாநிலத்தில் நாளை முதல் இந்த புதிய தொடக்கம் ஆரம்பமாகிறது. பெண்கள் அனைத்து விஷயங்களையும் பொறுமையாகவும் மிக சரியாகவும் கையாளும் திறமைப் படைத்தவர்கள். அந்த வகையில் டிராபிக் ஒழுங்கு படுத்தும் விஷ்யத்திலும் பெண் காவலர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com