சாதாரண பட்டன் போன் மூலமாக ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி: ரிசர்வ் வங்கி அறிமுகம்!

சாதாரண பட்டன் போன் மூலமாக ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி: ரிசர்வ் வங்கி அறிமுகம்!

ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை சாதாரண பட்டன் போன் மூலமாகவும் அனுப்பக்கூடிய புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த யுபிஐ வசதிக்கு '123 பே' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது:

சாதாரண பட்டன் போன் மூலமாகவும் பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யதுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள். மேலும், இதுதொடர்பான தகவல்களை பெற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும். இதன்மூலம் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் பயனளிக்கும். மேலும் இந்த '123 பே' யுபிஐ வசதியின் மூலம் ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடைய முடியும். இந்த புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

-இவ்வாறு ரிசர்வ வங்கி கவர்னர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com