1 கோடி சப்ஸ்கிரைபர்கள்: யூ-டியூபில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்று சாதனை!

1 கோடி சப்ஸ்கிரைபர்கள்: யூ-டியூபில் இந்திய பிரதமர் நரேந்திர  மோடி பெற்று சாதனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் தளத்தில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமரின் 'நரேந்திர மோடி' என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மில்லியன் பேர் சப்ஸ்கிரைபர்களை பெற்ற வகையில் உலகத் தலைவர்களில் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2007-ல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது இந்த சேனல் உருவாக்கப் பட்டது. அதில் நடிகர் அக்ஷய் குமார் உடனான நேர்காணல் மற்றும் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்த வீடியோக்கள் இந்த சேனலில் பிரபலம். பிரதமர் மோடியின் இந்த யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். .

மோடிக்கு அடுத்ததாக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ, யூடியூப் தளத்தில் 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், 30.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் இந்தோனேசிய அதிபர் 28.8 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7.043 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியை தற்போது ட்விட்டரில் 7.53 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 6.5 கோடி பேரும், முகநூலில் 4.6 கோடி பேரும் பின்தொடர்ந்து (Followers) வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com