10 ஆண்டுகளுக்கான தமிழ் செம்மொழி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

10 ஆண்டுகளுக்கான தமிழ் செம்மொழி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:

கலைஞர் கருணாநிதியின் பெரு முயற்சியால் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து செம்மொழித் தமிழுக்கென தனி நிறுவனம் 2006-ல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. இதற்கு ரூ.1 கோடி நிதி வழங்கி அறக்கட்டளையை கலைஞர்.மு.கருணாநிதி அந்நிறுவனத்தில் நிறுவினார். அநதவகையில் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ், கலைஞர் மு. கருணாநிதி உருவச்சிலை வழங்கப்படும்.

இந்த விருது 2010 முதல் 2019 வரையில் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படாத நிலையில், இப்போது அவற்றுக்கான விருதாளார்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

முனைவர் வீ.எஸ். இராஜம், (முன்னாள் லெக்சரர், பென்சில்வேனியா பல்கலைகக்ழகம்), பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் . சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்), பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள்பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம்), பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (மேனாள்தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி), பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர் புதுவைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி கொலோன் பலக்லைக்கழகம்), கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை), பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி), ஆகியோர் விருதுக்க் உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com