தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலையிலும் மாலையிலும் முறைப்படியான உடற்பயிற்சிகள், ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யத் தவறுவதில்லை. மேலும் அவ்வப்போது கிழக்கௌக் கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, மக்களையும் சந்தித்துப் பேசி உற்சாகமூட்டுகிறார்.
”நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல்நலத்தைப் பேணுவதிலும் அக்கறை செலுத்தவேண்டும்.சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்” என்று தன் டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வரின் புதிய உடற்பயிற்சி வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.