5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: உ.பி-யில் பிஜேபி.. பஞ்சாபில் ஆம் ஆத்மி உறுதி!

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: உ.பி-யில் பிஜேபி.. பஞ்சாபில் ஆம் ஆத்மி உறுதி!

நாட்டில் 5 மாநிலங்களில் பலகட்டங்களாக  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றது உறுதியாகியுள்ளது.

நாட்டில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலாக உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பிஜேபி வெற்றியில் முன்னிலை வகிக்கிறது. மேலுல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக வெற்றி வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்பார்த்தது போல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மேலும் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பிஜேபி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com