புதுச்சேரியின் பிரபல அடையாளம் இடித்து தரைமட்டம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியின் பிரபல அடையாளம் இடித்து தரைமட்டம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியின் பிரபலமான அடையாளமாக திகழ்ந்து வந்த மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவு வாயில், இன்று சாலை விரிவாக்க பணிக்காக இடித்து நொறுக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுச்சேரியில் சாலை விரிவாக்க[ பணிகளுக்காக மதகடிப்பட்டில் புதுச்சேரியின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு பிரபலப்படுத்தி வந்த புதுச்சேரி என்ற பெயருடைய முத்தமிழ் நுழைவாயில் மற்றும் அதன் அருகே உள்ள காமராஜர் நினைவு தூண் பொக்லைன் இயந்திரத்தில் இடித்து அகற்றப்பட்டது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுழைவு வாயில் கடந்த 2005-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்து.

இதுகுறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது;

புதுச்சேரியில் வாகன நெரிசல் ஏற்படுவதால், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் தற்போது அண்ணாநகர் பகுதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் செயற்கை கான்கிரீட் பாலம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ராட்சத கிரேன் மற்றும் நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையோரம் உள்ள மரங்கள், கட்டிடங்கள் சிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலைக்காக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை பகுதியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக இந்த நுழைவு வாயில் அகற்றப்பட்டுள்ளது. விரைவில் இதுபோன்ற நுழைவு வாயில் வேறு இடத்தில் அமைக்கப்படும். முத்தமிழ் நுழைவாயிலில் இருந்த தமிழ்த்தாய் சிலை பத்திரமாக பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு பொதுதுறைப் பனித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com