12-ம் தேதி தமிழகத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்: அமைச்சர் அறிவிப்பு!

12-ம் தேதி தமிழகத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்: அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  ஜனவரி 16 முதல் மே 6 வரை 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அன்று தடுப்பூசிகளை கேட்டுப் பெறாததன் காரணமாக இன்று தமிழ்நாடு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் வரிசையில் 9-வது இடத்தில் இருக்கிறது. கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தமிழகத்தை பாதிக்காதவாறு, தமிழ்நாடு – கேரளா எல்லையில் பரிச்சொதனைகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்து அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com