12 மற்றும் 13-ம் தேதிகளில் ஆயுதபூஜை சிறப்பு பஸ்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

12 மற்றும் 13-ம் தேதிகளில் ஆயுதபூஜை சிறப்பு பஸ்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற 12, மற்றும் 13-ம் தேதிகளில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 14 மற்றும் 15 –ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 12 மற்றும் 13-ம் தேதிகளில் சென்னையில் தாம்பரம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
திண்டிவனம் மார்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், வந்தவாசி, செஞ்சி, சேத்பட்டு, போளூர் மார்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, உதகை, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறூ தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com