13 மாவட்டங்களில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு: தலைமைச் செயலர்!

13 மாவட்டங்களில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு:  தலைமைச் செயலர்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் இருக்க தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொள்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. இதனால் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களூக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 19 -ம் தேதி 16 லட்சம் பேருக்கும் 26-ம் தேதி 24 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாரத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், தேனி, கோவை, திண்டுக்கல், திருச்சி, தேனி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பாக உள்ளதாகவும்.விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, அறந்தாங்கி, கடலூர், அரியலூர், வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாகவும் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்தவும் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com