0,00 INR

No products in the cart.

என் வீட்டுத் தோட்டத்தில் இமயமலையின் பிரம்ம கமலம்!

ஜிக்கன்னு.

இமயமலையின் ஒரு சில சிகரங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை மலர் பிரம்மக் கமலம். இந்த  மலர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மைக் கொண்டது. மேலும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த மலர் சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகே பூக்கும் தன்மை கொண்டது.

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்கள், சென்னை முகப்பேரிலுள்ள , ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் வசிக்கும் பிரபலத் தோட்டக் கலைஞர் ஜஸ்வந்த் சிங் வீட்டுத் தோட்டத்தில் இப்போது மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

‘’இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. ஆர்க்கிட் வகையைச் சேர்ந்த இந்த மலர்ச் செடிகள் இமயமலையின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக் கூடியது. அந்த வகையில் இமயமலையிலிருந்து இச்செடியைக் கொண்டு வந்து, அந்த தட்பவெப்பத்தை இங்கு உருவாக்கி இச்செடியை இங்கு வளர்த்தேன். ஒரே செடியில் 40-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது’’ என்று சொல்லத் தொடங்கினார் ஜஸ்வந்த் சிங்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த சிங் அவரது தாத்தா காலத்திலேயே  1937-ம் ஆண்டில் சென்னையில் குடியேறி விட்டாராம். கட்டுமானத் தொழில் பரம்பரையாக் செய்கிறார்.

’’நாங்கள் 1978-ம் ஆண்டிலிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறோம்’’ என்கிற ஜஸ்வந்த் சிங் வீட்டு சூழல் அரியவகை வனம் போல காணப்படுகிறது. .சுமார் ஐந்தாயிரம் சதுர அடியில் காய்கறி செடிகள், பழ மரங்கள், மூலிகை செடிகள், நூற்றுக்கணக்கில் சந்தன மரங்கள்,  மற்றும் செம்மரங்கள் என்று நிறைந்துள்ளது.

‘’பிரம்ம கமலம் மலர்ச் செடியை இமாலய மலைகளில் இருந்து எடுத்து வந்து இங்கே வளர்த்து வந்தேன். இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது. ஆனால், இமாலயச் சூழலை இங்கு முழுவதுமாக உருவாக்க எனக்கு பல காலம் பிடித்தது. அநத வகையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்த பூ முதலில் மலர்ந்தது, அதன்பிறகு இவ்வளவு வருடம் கழித்து இப்போது மீண்டும் மலர்ந்துள்ளது’’ என்றார் மகிழ்ச்சியாக!

பிரம்மாவிற்கு உகந்ததான இந்த அதிசய பூவின் நடுவில் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படுகிறது. மேலும் இரவில் இந்த பூ மலரும் போது,  நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது பலன் தரும் என்று கருதப்படுகிறது.  இந்த அதிசயப் பூவின் அபூர்வ மணம் அக்கம்பக்கம் பல அடி தூரத்துக்கு மணம் பரப்புகிறது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பெல்காம் யாருக்கு? சந்தன மாநில​ம் vs சிவாஜி மாநிலம்!

0
-ஜி.எஸ்.எஸ். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் மேடை ஒன்றில்  ‘இது மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம்.  இதை நாம் கொண்டாடுகிறோம்.  ஆனால் மராத்தி மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் சில பகுதிகள்  நம்...

கிராஃபிக் காட்சியை உண்மை என நம்பும் கிரண் பேடி!

0
ஹாலிவுட் திரைப்பட கிராபிக் காட்சியை உண்மை என்று நம்பி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தன் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற...

பயணிகள் கவனிக்கவும்: வித்தார்த் நேர்காணல்!

0
பேட்டி: ராகவ் குமார். தமிழ் சினிமாவில் எப்போதாவது சில படங்கள் தந்தாலும் மனதில் நிற்கும் படியான பட ங்களை தந்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார வித்தார்த். இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்பன் என்ற...

‘’பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்’’: நடிகை சமந்தா!

0
-ஜி.எஸ்.எஸ். நடிகை சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்' என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத்...

வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

0
- ஜிக்கன்னு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் வாட்டர் ஆப்பிள் பழ சாகுபடியை தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் செய்து அசத்துகிறார். தர்மபுரியில் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன்...