0,00 INR

No products in the cart.

சமந்தா என்றாலே சர்ச்சையா?

நடிகை சமந்தா புதிய வெப் தொடரில் நடிக்க பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சாகுந்தலம், யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதோடு ஹாலிவுட் படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளார்.

அமேசான் பிரைமில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸில் சமந்தாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், அவர்  ‘சிட்டாடல்’ என்ற புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிற்து. பாலிவுட் பிரபல நடிகர் வருண் தவானுடன் சமந்தா இணைந்து நடிக்க இத்தொடரி ஹாலிவிட்டின் ‘அவென்சர்ஸ்’ பட இயக்குநர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிக்கவுள்ள்னராம். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி உள்ள நிலையில், இதில் சமந்தா வேற லெவல் ஆகஷனில் மிரட்டப் போகிறாராம்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றுக்கு சமந்தா  நூடுல்ஸ் ஸ்ட்ராப் உடன் கூடிய கவர்ச்சியான மரகத பச்சை கவுன் அணிந்து கொண்டு வந்ததில், அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. நடிகை சமந்தா கொடுத்த கவர்ச்சி போஸ் பற்றி ஏகப்பட்ட கண்டனங்களும் ட்ரோல் மீம்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா பதிவிட்ட போஸ்ட் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில் அவர் தெரிவித்ததாவது;

பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்துங்கள். பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்து, நிறம் என பாகுபாடு காட்டும் ஒரு பெரிய லிஸ்ட் நீண்டு கொண்டிருக்கிறது. நாம் 2022-ல் இருக்கிறோம். இன்னமும் பெண்களை அவர்களின் உடையை வைத்து ஜட்ஜ் பண்ணுவதை நிறுத்திவிட்டு, சுய முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

-இவ்வாறு சமந்தா காரசாரமாக பதிவிட்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் அவருக்கு பதில் கேள்வி கேட்டுள்ளனர். அதாவது,  சுதந்திரம் என்ற பெயரில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்களில் ஆடுவதும் சரக்கு விளம்பரங்களில் நடிப்பதும் சரிதானா.. இதுதான் 2022-ல் உள்ள முன்னேற்றமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்னை இல்லத்திலிருந்து அடுத்த நடிகர்!

0
-லதானந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார்.  நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது...

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

0
-ராகவ் குமார். ‘ஆர்ட்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் ‘நெஞ்சுக்கு நீதி’யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்...

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...