பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69. இந்தி திரைப்படங்கள் மட்டுமன்றி வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹரி கடந்த திங்கள்கிழமையன்று தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று -செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்தது.
இந்திய சினிமாவில் டிஸ்கோ பாடல்கள் 80-களில் உச்சத்தில் இருந்தது. ஜிகுஜிகு மெட்டாலிக் காஸ்ட்யூமில் கலர்கலர் வண்ணங்களைக் குழைத்த மேடைகளில் சிந்தஸைஸர் இசை பீட்டுகளில் இந்தியர்கள் டிஸ்கோ ஃபீவர் பிடித்துத் திரியக் காரணமாயிருந்த ஒரு இசையமைப்பாளர்தான் பப்பி லஹரி.
பாலிவுட்டில் `பப்பி தா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மியூசிக்கல் டான். சல்தே சல்தே, டிஸ்கோ டான்ஸர், ஷராபி ஆகிய பாடல்கள் அவரது இசையில் ஆல் டைம் ஹிட் பட்டியலில் இருப்பவை. கடைசியாக 2020ல் அவரது இசையில் பாகி 3 படம் வெளியானது. அதில் பன்காஸ் என்ற பாடல் ஹிட் ஆனது.
கடைசியாக இந்தி பிக்பாஸ் சீசன் 15ல், நடிகர் சல்மான் கானுடன் பப்பி லஹரி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
![]() |
ReplyForward
|