உக்ரைன் இனி எப்போதும் நேட்டோவில் இணையாது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி!

உக்ரைன் இனி எப்போதும் நேட்டோவில் இணையாது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 20-வது நாளாக போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கிவ், மரியுபோல் நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கீவ்வில் ஊரடங்கும் கூட அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக நேட்டோ குறித்தும் அதில் உக்ரைன் இணைய முயற்சித்தது குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட கருத்துக்கள் பரபரப்பைக் கிள்ப்பியுள்ளன. சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையப் போவதில்லை என்று உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவப் படைத் தளபதிகள் மத்தியில் ஜெலன்ஸ்கி இதைக் குறிப்பிட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

நேட்டோவில் உறுப்பினராவது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக முடியாது என்பதை இப்போது நாம் புரிந்து கொண்டோம். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய அதன் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று சொன்னது உண்மையில்லை.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உக்ரைன் போரில் இது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என்பது ரஷ்ய அதிபர் புடின் விதித்த நிபந்தனை. இந்நிலையில் இந்த  நிபந்தனையை உக்ரைன் ஏர்று கொண்டதன் அடையாளமாகவே ஜெலன்ஸ்கி இவ்வாறு பேசியதாக கருதப் படுகிறது.

மேலும் ரஷ்யாவின் குண்டு மழையில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக (No fly zone) அறிவிக்க வேண்டும் என நேட்டோ அமைப்பிடம் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்தது. அதையடுத்து நேட்டோ அமைப்பு மீது ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com