0,00 INR

No products in the cart.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படைகள் தயார்!

தமிழகத்தில் நாளை மறுநாள் ( பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு  இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்;

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.அதன்படி சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் இன்று முதல் செயல்பட உள்ளன.

ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படைகள் என்ற அடிப்படையில் கூடுதலாக மேலும் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 45 பறக்கும் படைகளும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து இலவச தொலைபேசி என் மூலம் பறக்கும் படை குழுக்களுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: நித்யானந்தா பரபரப்பு வாக்குமூலம்!

0
இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், சுவாமி நித்தியானந்தா தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள்  பரவிய நிலையில், இதுகுறித்து , நித்யானந்தா சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது: சர்ச்சைக்குப்...

விகரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல்: நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்! 

0
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று வெளியானநிலையில், அந்த பாடலில் மத்திய அரசை விமரிசித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தது. கமல்ஹாசன் அந்த பாடலை தானே எழுதி பாடியிருந்தார்....

மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம்; உத்தரபிரதேச அரசு உத்தரவு!

0
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசின் மதரஸா கல்வி வாரியம் தெரிவித்ததாவது: உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம்...

இலங்கையின் புதிய பிரதமர்: பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

0
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்கே. இப்பதவியை இவர் 6-வது முறையாக ஏற்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட...

16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது; வங்கக்கடலில் உருவான அசானி புயல் நேற்று ஆந்திரா மாநிலம்...