ஐபிஎல் மெகா ஏலம்: அதிரடி ஆக்‌ஷன் காட்டிய காவ்யா மாறன்!

ஐபிஎல் மெகா ஏலம்: அதிரடி ஆக்‌ஷன் காட்டிய காவ்யா மாறன்!

– பிரமோதா

சமீபத்தில் பெங்களூருவில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இரண்டு நாட்களுக்கு நடந்தது.  இந்த முறை கூடுதலாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப் பட்டுள்ளதால், யார் யார் எந்தெந்த அணியில் இணைவார்கள் என்ற எதிரபார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஒருவழியாக நடந்து முடிந்த ஏலத்தில் மொத்தம்  204 வீரர்களை  ( அதில் 67 பேர் வெளிநாட்டவர்கள்)  இந்த 10 அணிகளும் ஏலத்தில் எடுத்தன. அந்த வகையில் மொத்தமாக 551 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு இந்த 204 வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் ஏலத்தில்.. வீரர்களை விட அதிக கவனம் ஈர்த்தவர்..காவ்யா மாறன். சன்டிவி கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி பல கோடி ரூபாயை ஏலத்தில் இழக்க வைத்த சாணக்கியத்தனத்தைக் கண்டு அனைவரும் அசந்து போயினர்.

அதாவது இந்த மெகா ஏலத்தில் முன்னணி வீரர்களை வாங்க எல்லா அணிகளும் கடும் போட்டியிட்டன. இந்நிலையில் ஆர்.சி.பி அணியானது வேகப் பந்து  வீச்சாளர் ஹர்ஷல் படேலை லுக்கு ஏலம் கேட்டபோதுதான் சன் ரைசர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான காவிய மாறன, ஹர்ஷலின் விலையை எகிற வைத்து, ஆர்சிபிக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.

கடந்த சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஹர்ஷல் படேல் விளையாடி, அந்த சீசனில் அதிக விக்கெட்களை குவித்தவர் என்பதால், அவரை மீண்டும் தன் அணிக்காக வாங்க விரும்பியது ஆர்.சி.பி அணி. அவரை மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க விரும்பாத நிலையில், காவியா மாறன் விலையை ஏற்றிக் கொண்டே போய் ஆர்.சி.பிக்கு டஃப் பைட் கொடுத்து ஏலம் கேட்டார். இதனால், ஹர்ஷல் படேலின் விலை எகிறத் துவங்கியது. இறுதியில் ஆர்சிபி அணி 10.75 கோடிக்கு ஏலம் கேட்டபோது, காவ்யா மாறன்ஒதுங்கிக்கொண்டார். இதனால், ஆர்சிபி அணி ஹர்ஷல் படேலை 10.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டில் வெறும் 20 லட்சத்திற்கு ஹர்ஷல் படேலை வாங்கிய ஆர்சிபி, இப்போது அதே வீரருக்கு 10.75 கோடி கொடுக்கும்படி ஆகிவிட்டது.

இந்த மெகா ஏலம் நடந்தபோது டிவி கேமராக்கள் குறு குறு சிரிப்போடு காட்சியளித்த காவ்யாவையே சுற்றி சுற்றி வந்தன. அவரது அசால்டான ஆக்‌ஷன் கண்டு இன்ஸ்டாகிராம் உட்பட ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டார்கள்.. சிறிது கூட பதற்றப்படாமல்..வெகு கூலாக அசால்ட்டாக ஏலத்தை கையாண்டார் காவ்யா..உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல காத்திருந்து..தேவையான வீரர்களை லபக்கென்று இழுத்து போட்டு கொண்டதில் வியாபார நுணுக்கம் தெரிந்தது..அணியின் பயிற்சியாளர்கள்..நிர்வாகிகளோடு உடனுக்குடன் கலந்து பேசி. வீரர்களை தேர்வு செய்த வேகத்தை பார்த்து மலைத்து போய் நின்று விட்டனர் எதிரணியின் உரிமையாளர்கள் .

மேலும் அச்சமயம் இன்ஸ்டா..டுவிட்டர் என்று வலைதளங்களில்..காவ்யாவுக்கு என்று தனியாக ஆர்மி தயார் செய்து விட்டனர் நெட்டிசன்கள்…காந்த சிரிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட காவ்யா யார் என்று கூகுளில் பலர் தேட ஒரு கட்டத்தில் சர்வர் ஹேங் ஆனது உச்சகட்டம்.

காவ்யா கவனம் பெறுவது இது முதல் முறையல்ல..கடந்த முறை நடைபெற்ற ஏலம்.. மற்றும் ஐ பி.எல் போட்டிகளின் போது.. ஐதராபாத் அணி விளையாடும் போது.. சட் சட்டென்று மாறும் இவரது முகபாவங்களும் வைரலாகி இருக்கின்றன.

பொதுவாக  ஐபிஎல் ஏலத்தில் அதிகம் கவனம் ஈர்ப்பவர்களில் பிரீத்தி ஜிந்தா தான் ஸ்கோர் செய்வார்..அடுத்த படியாக நீதா அம்பானியும் ஜுஹி சாவ்லாவும் கலக்குவார்கள்..ஆனால் இந்த முறை அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தார்..தமிழ் பெண் காவ்யா மாறன். இந்த முறை ஏலத்தில் நீதா அம்பானி..கொல்கத்தா உரிமையாளர். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் சுனைனா கான், .ஜுஹி சாவ்லாவின் மகள் என்று பலரும் கவனத்தை ஈர்த்தாலும், ரசிகர்களின் சாய்ஸ் காவ்யாதான்..

முன்பு சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பையை வாங்கி கொடுத்த டேவிட் வார்னரை, பின்னர் அந்த அணி ஒரம் கட்டியதில். சன்ரைசர்ஸ் அணி மீது ரசிகர்களுக்கு சற்று கோபம் இருந்தாலும், அதை அப்படியே மறக்க செய்ததில் காவ்யாவுக்கும் முக்கிய பங்குண்டு.

பிஸினஸ்  எது.. புகழ் எது.. என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் காவ்யா.. அவர் மட்டும் அல்ல .மாறன் குடும்பத்தினரின் வெற்றி ரகசியமும் அதுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com