spot_img
0,00 INR

No products in the cart.

18 ஆயிரம் நெய்த்தேங்காய் அபிஷேகம்: சபரிமலை ஐயப்பனுக்கு ஒரே பக்தர் நேர்த்திக் கடன்!

சபரிமலை ஐயப்பனுக்கு கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய்த்தேங்காய் அபிஷேகம் செய்து வரலாறு படைத்தார்.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்ததாவது:

சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடு ஆகும். இதற்காக நெய் நிரப்பப்பட்ட 1 அல்லது 2 தேங்காய்களை வழக்கமாக பக்தர்கள் தங்கள் இருமுடி கட்டுடன்சுமந்துவருவார்கள். சன்னிதானத்தில் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய்யை சேகரித்து, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்வதுவழக்கம்.

அந்த வகையில் சபரிமலை வரலாற்றிலேயே பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நேய்த் தேங்காய்களை இன்று ஐய்யப்பனுக்கு அபிஷேகம் செய்தார். அவர் தான் நினைத்த காரியம் அய்யப்பன் அருளால் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இவ்வாறு நேர்த்திக்கடன் வேண்டிகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 18 ஆயிரம் தேங்காய் மற்றும் அதற்கு தேவையான நெய் ஆகியவற்றை லாரி மூலம் பம்பைக்கு அனுப்பிவைத்தார். மேலும், நெய் அபிஷேகத்திற்கான கட்டணமாக ரூ.18 லட்சத்துக்கான வரைஓலையையும் அனுப்பிவைத்தார். அந்த வகையில் நெய்நிரப்பப்பட்ட அந்த 18 ஆயிரம் தேங்காய்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. சபரிமலை வரலாற்றில் ஒரே பக்தர் 18 ஆயிரம் நெய்தேங்காயை அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்வது இதுவே முதல்முறை.

-இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்தார்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

சபரிமலை நடை அடைப்பு; மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்தது!

0
சபரி மலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் முடிந்ததையொட்டி, இன்று ஐயப்பன் கோவில் நடை அடைக்கப் பட்டது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டுசார்பில்தெரிவித்ததாவது: சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு...

லதா மங்கேஷ்கருக்கு கொரோனா: தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்கிறது சிகிச்சை!

0
இந்தித் திரையுலகின் பழம்பெரும்பாடகிலதாமங்கேஷ்கருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 92. அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் லதாமங்கேஷ்கர்உள்ளார். இந்நிலையில்,...

சுவிஸ் வங்கி கடன்பாக்கி; தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் பங்களா பறிமுதல்?!

0
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சுவிஸ் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் லண்டனில் உள்ள அவரது பங்களா பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் விஜய்...

அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா!

0
மேற்கிந்திய தீவுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் கல்ந்துகொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ்துல் உள்பட 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்...

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

0
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றர். அதிமுக் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடிக்கு...