0,00 INR

No products in the cart.

18 மணி நேரத்தில் 55 லட்சம் பார்வை: அண்ணாத்த டிரெய்லர் டிரெண்டிங்கில் முதலிடம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டதுஇந்நிலையில், இந்த டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4-ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், ‘நீ யாருங்கிறது, நீ சேர்த்து வச்சிருக்கிற சொத்துலேயோ உன்னை சுத்தியிருக்கிறவங்க கிட்ட இருக்கிற பயத்திலோ இல்ல. நீ செய்யுற செயல்லேயும் நீ பேசுற பேச்சுலேயும் இருக்கு. இது வேதவாக்குஎன ரஜினிகாந்த் பேசும் அதிரடி வசனத்துடன் ஆக்ஷன் காட்சி ஆரம்பிக்கிறது. தொடர்ந்து ரஜினி, சூரி, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்டோர் தோன்றும் காமெடி காட்சிகளும், மாமோய்என குஷ்பு அழைப்பதும் அத்தான்என மீனா அழைப்பதும் என நகைச்சுவையுடன் டிரெய்லர் களைகட்டுகிறது. இந்த டிரெய்லர், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 18 மணி நேரத்தில் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்ணாத்த டிரெய்லர் பார்த்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

0
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் புதிய...

டெல்லி சென்றார் ஓபிஎஸ்!

0
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.  அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

0
நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; நெல்லை அணி அபாரம்!

0
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது....

கல்யாணத்தில் கலாட்டா: நண்பனைச் சுட்ட மணமகன்!

0
உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே...