19-ம் தேதிமுதல் கேரளாவில் மின்வெட்டுக்கு வாய்ப்பு: கேரள மின்துறை அமைச்சர் அறிவிப்பு!

19-ம் தேதிமுதல் கேரளாவில் மின்வெட்டுக்கு வாய்ப்பு: கேரள மின்துறை அமைச்சர் அறிவிப்பு!

கேரளாவில் அக்டோபர் 19-ம் தேதி முதல் மின் வெட்டு இருக்கக் கூடும் என, அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
தற்போதைய சூழலில் கேரளாவில் 100 மெகாவாட் மின்சாரம் பற்றாகுறை நிலவுகிறது. அதனால் அக்டோபர் 19-க்கு பிறகு மின்வெட்டு அமல்படுத்த நேரிடலாம். தற்போதைய சூழ்நிலையில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால் இப்போது நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் நிலக்கரியின் தேவை 40 % அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத நிலையும், உள்நாட்டில் மழை காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை நடைபெற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாநிலங்களில் மின்வெட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை தற்போதை நிலவரப்படி 100 மெகாவாட் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு மத்திய அரசு உதவிகளை வழங்கினால், மின் வெட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியும். எனினும் அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு கேரளாவில் மின் வெட்டு குறித்து முழுமையாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com