அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பூந்தமல்லி சிறையில் அடைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பூந்தமல்லி சிறையில் அடைப்பு!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக பிரமுகரை அமைச்சர் ஜெயகுமார் தாக்கிய வழக்கில் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, வண்ணாரப்பேட்டை 49-வது வார்டில் திமுகவினர் வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுகவினர் அங்கு வந்தனர்.

அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திமுக நிர்வாகி நரேஷை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து ஜெயக்குமார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மேஜிஸ்டிரேட் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com