0,00 INR

No products in the cart.

184 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளோம்!

நேர்காணல்: சாருலதா.

’கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. அப்படி தமிழ்நாட்டில் பல கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து பராமரிப்பிற்கும் உதவி வருபவர் திருமதி மகாலட்சுமி சுப்ரமணியம். இதுவரை இவர் தலைமையில் தமிழகத்தில் 184 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயமல்ல.. அவரிடம் பேசியபோது மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன..

இந்த மாபெரும் பணியில் உங்களுக்கு ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

காஞ்சி மஹாபெரியவர் 1974-ம் வருடம் கொல்லாசத்திரம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, நாங்கள் அவரைக் குடும்பமாக தரிசிக்கப் போனோம். அப்போது அவர் ’’கிராமக்கோவில்கள் பலவும் தக்க பராமரிப்பின்றி அழிய ஆரம்பிக்கிறதே. இவற்றைக் கட்டிய அரசர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டியிருப்பர்?. தெய்வ அருள் அனைவருக்கும் கிடைக்க எண்ணி செய்த செயல்கள் வீணாகலாமா?’’ என்று சொன்னவர், என்னை ‘’கோழிகுத்தி’’ என்று என் சொந்த ஊர் பெயரைச் சொல்லி ’’ அழைத்தார். என்னிடம் ‘’உன் அகமுடையானுக்கு என்ன சம்பளம்?’’  என்றார். ’’ நான் ரூ.750’’  என்றவுடன், ‘’ நீ பணம் தர வேண்டாம். ஆனால் பார்க்கும் அனைவரிடமும் கேட்டு எனக்கு தரும்படி கேள்’’ என்றார். அதுதான் ஆரம்பம்..

’தென்னை மரங்கள் நீர் ஊற்றும் அளவில் காய் தருவது போல் இறைவனை நாம் வழிபடும் அளவில் நம் வாழ்வும் மேம்பாடு பெறும். சிவனுக்கும் பெருமாளுக்கும் பெரிய பெரிய கோவில்கள் கட்டிய நம் முன்னோர்கள், மன்னர்கள் முட்டாள்கள் அல்லவே! அந்த புனித தலங்களில்  வவ்வால் குடியேறி புழுதி படிந்து காணப்படுவது வேதனை தருகிறது’ என்ற பெரியவாளின் பேச்சு – என் மனதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது. அதுதான் இன்றளவும் என் செயல்பாடுகளின் ஊக்கசக்தியாக இருக்கிறது.

தற்சமயம் எவ்வளவு கோவில்கள் தங்களின் பராமரிப்பில் உள்ளது?

மஹாபெரியவா அன்று போடப்பட்ட விதைதான் இன்று மிகப்பெரிய ஆலமரமாகி எங்கள் டிரஸ்ட் மூலம் 150 முதல் 200 கோவில்கள் பராமரிக்கி றோம்.

முதன்முதலாக எப்போது நீங்கள் செயல்படத் துவங்கினீர்கள்?

திருக்கயிலாய யாத்திரையை  1995-ல் என் தாயாருடன் போய் வந்தோம். அந்த காலங்களில் கயிலாய யாத்திரை செய்வது மிகவும் கடினமான ஒரு செயல். அப்போது அம்மா சொன்னார், ’மிகவும் கடினமான கயிலாய யாத்திரை செய்து வந்தது எனக்கு சந்தோஷம் . ஆனால் நம் ஊர் கோழிகுத்தியில் வானமுட்டி பெருமாள் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதை சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஏதாவது செய்’ என்றார். அப்போது எனக்கு கோவில் பற்றி எதுவும் தெரியாது ஆகையால் அதே ஊரைச்சேர்ந்த என்னோடு படித்த திரு விஜயகுமார் என்பவரிடம் நேரில் சென்று பேசினேன். அவரும் அதில் ஈடுபாடு கொண்டார். அதை செயல்படுத்துவதில் நிறைய பிரச்சினைகள், அவமானங்கள், கஷ்டங்கள் சந்திக்க நேர்ந்தது. ஆனால் கடவுள் அனுகிரகத்தால்,  எல்லாம் நல்லபடியாக நடந்து 2002-ல் ஆரம்பித்து 2007-ல் கும்பாபிஷேகம் ஆனது.

இதற்குப் பிறகு மாயவரம் அருகே குத்தாலம் என்ற ஊரிலிருந்து வந்த ஒருவர் அங்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்டியிருப்பதாகவும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைத்தார். அங்கு போனோம். பின்னர் அங்கு அருகிலேயே உள்ள சவுந்தர நாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய அழைத்துப்போயினர். அக்னீஸ்வரரும் அக்கோவிலில் உள்ளார். என்னிடம் ’இந்தக் கோவிலை எடுத்து புனரமைப்பு செய்து தர முடியுமா?’’ எனக் கேட்டனர். ’’நான் கோவில் கட்டுவது என் வேலையில்லை. அதற்குத்தான் கூப்பிட்டீர்களா?’’ என்று அம்பாளைக்கூட பார்க்காமல் கோபமாக கிளம்பி கோழிக்குத்தி சென்று விட்டேன். காரிலிருந்து இறங்கி, கைப்பையில்  வீட்டு சாவியை தேடினால் காணவில்லை. பையில், காரில் என்று எங்கு தேடியும் கிடைக்காததால், குத்தாலம் கோவிலில் விழுந்திருக்குமோ என தேடி மீண்டும் அங்கே போனோம். என்னவென்று சொல்வது?! அம்பாளின் பாதத்தில் என் வீட்டு சாவி உட்கார்ந்திருந்தது! அப்போதுதான் அம்பாள் முகத்தையே ஏறெடுத்துப் பார்த்தேன். அந்த கருணை பொங்கும் கண்கள், ’’நீதான் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் எடுத்து செய்ய வேண்டும்’’ என சொல்வது போல் இருந்தது. அதேநேரம் அம்பாள் கழுத்திலிருந்து மாலையும் கீழே விழுந்தது. இனி யோசிக்க ஒன்றுமில்லை.. உடனே ஊர்க்காரர்களை கூப்பிட்டு பேசி அனைத்தும் முடிவு செய்து வேலை ஆரம்பித்தோம். ஆறே மாதத்தில் காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் மற்றும் அனைத்து ஆதீனங்களை அழைத்து மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிரச்சினைகள் ஏதாவது ஏறப்பட்டது உண்டா?

ஒரு கோவிலின் புனரமைப்பின்போது ‘’இதில் நாங்களும் உரிமையுள்ளவர்கள்’’  என்று ஒரு சாராரிடமிருந்து பிரச்சினை வந்தது.  அதனையடுத்து அவர்களை முதல் பொறுப்பாளராக நியமித்தோம். அக்கோவிலில் எந்தெந்த சன்னதிகளை அவர்கள் பொறுப்பெடுத்து கொள்கிறார்கள் என்று கேட்டுக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள சன்னதியை நான் செய்து கொடுக்கத் துவங்கினேன். பொதுவாக,  ஊர்க்காரர்கள் அன்புடனும்  பக்தியுடனும் வேலைகளை பகிர்ந்து கொள்ள வருவது சிறப்பு.  மேலும் கமிட்டி என்று போடும் போது யார் அதிகம் பொருளுதவி மற்றைய உதவிகள் செய்கிறார்களோ அவர்களை முக்கிய பொறுப்பில் போடுவோம்.

கோயில் கும்பாபிஷேகம் தவிர வேறென்ன பணிகள்?

தேர்த் திருப்பணி செய்து வருகிறோம்.வைத்தீஸ்வரன் கோவிலில் செய்து கொடுத்தோம். இப்போது உத்தவேதீசுவரர் திருக்கோயில் (குத்தாலம் ) திருப்பணி தருமபுர ஆதீன உதவியுடன் நடைபெற்று வருகிறது. சிட்டி யூனியன் பாங்க் மற்றும் வெளி நாட்டு வாழ் அன்பர்கள் உதவியுடன் தான் இது போன்ற நல்ல செயல்களை செய்கிறோம்.

மேலும் குருபெயர்ச்சி சமயத்தில் புஷ்கரம் விழாக்களில் பங்கு கொள்கிறோம். காவிரியில்தான் முதல் புஷ்கரம் செய்தோம். புஷ்கரம் பற்றி தமிழ்  நாட்டில் தெரியாமல் இருந்த நிலையில், பல தடைகளை கடந்து அப்போதைய மந்திரி திரு ஓ எஸ் மணியன் உதவியுடன் மயிலாடுதுறையில்  முதன் முதலாக காவிரி புஷ்கரம் நடத்தப்பட்டது.பிறகு தாமிரபரணி, பிரம்மபுத்திரா,துங்கபத்ரா, சந்திரபாகா இப்போது இந்த வருடம் வருகிற ஏப்ரல் 14 அன்று ப்ரணீதா என்ற நதியில் வாராங்கல் அருகே காளீஸ்வரர் என்ற ஊரில் புஷ்கரம் நடைபெற உள்ளது. அங்குள்ள கோவிலில் காளீஸ்வரர்,முக்தீஸ்வரர் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளது.அதில் காளீஸ்வரர் யமனுக்குரியவர். முக்தீஸ்வரர் முக்தி தருபவர். கோதாவரி யுடன் சேர்த்து ஆறு நதிகள் சங்கமம் ஆகும் புனிதமான இடம்.

கடைசியாக கும்பாபிஷேகம் செய்த கோவில்?

உச்சிவாடி என்ற ஊரில்இந்த வருடம்  பிப்ரவரி 14 அன்று  கபால மோட்சம் தரக்கூடிய பிரமரேந்திரர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தோம். பொதுவாக கபாலம் வெடித்துத்தான் ஞானிகள் முக்தி பெறுவர். அதற்கு அடையாளமாக இக்கோவிலிலுள்ள ஸ்வாமியின் உச்சியில் ஒரு பிளவு இருப்பதை நாம் தரிசிக்கலாம்.

இந்து சமய அற நிலையத் துறை கோவில்கள் என்றால் எப்படி செய்வீர்கள்?

அதற்கும் முறையாக அனுமதி வாங்கித்தான் செய்கிறோம்.. இறைவன் அருளால் 15 வருடங்களாக அறநிலையத் துறையினர் முழு ஒத்துழைப்பு தந்து ,அனுமதித்து  ஆதரிக்கின்றனர்.

விசேஷமாக செய்தது எதுவும் சொல்ல முடியுமா?

கொர நாட்டுக் கருப்பூர் என்ற ஊரில் பெட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்தில் உலகில் எங்கும் நடைபெறாத 3 உத்தம பட்சம் போட்டு பரிவாரங்களுடன் 165 குண்டங்கள் வைத்து கும்பாபிஷேகம் செய்தோம். அங்கும் தேர் செய்துள்ளோம். ஆனால் இது அனைத்திற்கும் காரணம் மஹா பெரியவர் தான். எனக்கு பத்மா சேஷாத்ரி பள்ளியில் வேலை கிடைத்து, அங்கு 30 வருடம் வேலை பார்த்ததும் அவர் அருளால்தான்!

அதுபோல் அனேக கும்பாபிஷேகங்கள் காஞ்சிப் பெரியவர் மற்றும் அனைத்து ஆதீனங்கள் கலந்து கொண்டு நடத்தியது பெரும் பேறு! இதில் விசேஷமான சம்பவமாக ஒவ்வொரு கும்பாபிஷேகத்தின்போதும் நான்கு, ஆறு என்று  கருடன்கள்  வட்டமிடத் தவறுவதில்லை. மேலும் ஒவ்வொரு கோவிலிலும் எத்தனையோ விசித்திர அனுபவங்கள் உண்டு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் பாம்பு வந்து சட்டை உரிக்கும். அக்கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக நாங்கள் யாகசாலை போடும் போது, ஒரு பாம்பு நடுவில் வந்து உட்கார்ந்துகொண்டு நகராமல் அடம் பிடித்தது. பிறகு கற்பூரம் கொளுத்தி வேண்டிக் கொண்டதால் குளத்திற்கு அருகே சென்று மறைந்ததது கும்பாபிஷேகம் முடியும் வரை வரவில்லை.

உங்களுக்குக் கிடைத்த அறிவுரை ஏதும் உண்டா?

ஒரு முறை ஏதோவொரு மனநிலையில் ‘இந்த திருப்பணி வேலைகளை எல்லாம் விட்டுவிடலாம் என்று பார்க்கிறேன்’ என்று  ஸ்ரீ ஜெயேந்திர பெரியவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ’’ நீ செய்யாவிட்டால் என்ன? உனக்கு முன்னால் யாரும் செய்யவில்லையா? இனி யாரும் செய்யப் போவதில்லையா? பூனை கண்ணை மூடினால் உலகம் அஸ்தமனம் என்று நினைக்காதே.எத்தனையோ பேர் கோடி கோடியாக பணம் வைத்திருப்பினும் இந்த குடுப்பினை கிடைக்கவில்லை.. அப்படியிருக்க கடவுள்  உன்னை தேர்ந்தெடுக்காவிட்டால் உன்னால் செய்ய முடியுமா? அதே போல் உனக்கு முடியாத போது அவராகவே உன்னை விட்டு விடுவார்’’ என்று சொன்னது எனக்கு பெரிய பெரிய அறிவுரை..

மறக்க முடியாத நிகழ்வு?

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயில் புனரமைப்பு செய்ய என்னை அணுகிக் கேட்டனர். பெரிய அளவில் செய்ய வேண்டிய நிலை என்பதால் மறுத்தேன் ஆனால் அவர்கள், ‘’பெயர் எழுதிப் போட்டதில் உங்கள் பெயர் தான் வந்துள்ளது . ஆகவே நீங்கள் அவசியம் ஏற்க வேண்டும்’’  என கேட்டனர். நானும் குருநாதர் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர், ‘’அம்பாளுக்கு உன் தகுதி தெரியும். தைரியமாக செய்’’ என்று ஒரு ரூபாய் நாணயம் தந்து ஆசிர்வதித்தார். அங்கிருந்து நேரே ஸ்ரீ பால பெரியவாள் தரிசனம் செய்ய சென்றேன். அவரிடம் இது பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போது ஒருவர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்து வந்துள்ளேன் என்றார்.ஸ்ரீபால பெரியவா ’’சகுனம் எப்படி இருக்கிறது பாருங்கோ’’ என்று சொல்லி மனமார வாழ்த்தினார். அதன் பின்னர் அந்த கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீ பால பெரியவா கலந்து கொண்டு நடத்திய வைபவமாக மிகவும் விமரிசையாக நடந்தது.

இப்போது இப்படி கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு  15 வருடங்கள் ஆனதினால் ஒரு  தீஸிஸ் எழுதி பி.எச்.டி. வாங்கும் அளவு நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அது போல, பதிவு செய்யப்பட்ட எங்களின் இந்த டிரஸ்ட்டில் பாலன்ஸ் ஷீட் எப்போதுமே ஜீரோவாகத்தான் இருக்கும். ஏனெனில் வரவிற்கு தகுந்தாற்போல்  மொத்த பணததையும் கோவில்களுக்கு செலவும் செய்து விடுவோம். மஹா பெரியவா அனுக்கிரகத்தில் வெளிநாட்டிலுள்ள என் குழந்தைகள் இங்கு திரும்பி வந்து சேர்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது’’ – என சொல்லி முடித்தார், திருமதி. மகாலட்சுமி சுப்ரமணியம்.

இவரது சமீபத்திய தொண்டாக, மஹான் சேஷாத்ரி ஸ்வாமிகள் மணி மண்டபம் வழூர் கிராமத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஸ்ரீ பால பெரியவா, மற்றும் மடாதிபதிகள், ஆதீனங்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடை பெற உள்ளது.

‘’அனைவரும் கலந்து கொண்டு மகானின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்’’ என்று அன்புடன் சொல்லி விடைகொடுத்தார் திருமதி. மகாலட்சுமி சுப்ரமணியம்.

 

2 COMMENTS

  1. ஆஹா அற்புதம் . சூப்பரான சேவை. பாராட்ட வார்த்தைகள் இல்லை .தொடரட்டும் அவரின் தெய்வத் தொண்டு.

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

0
-சக்தி சாமிநாதன். தருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.  சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து...

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

0
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5...

மகரிஷி சரக் சபத்; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி சர்ச்சை!

0
- சவுமியா சந்திரசேகரன். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து  ‘சரக் சபத்’ உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியிலும் இதே உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள்...

பீஸ்ட்டில் நடித்தது கனவு மாதிரி இருக்கு: சுஜாதா பாபு!

0
-பிரமோதா. பீஸ்ட் படத்தில் நடிகை அபர்ணா தாஸின் அம்மாவாக நடித்தவரைப் பார்க்கும்போது, ‘அட..இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.’ என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அடுத்த நிமிடமே  ‘சன் டிவி நியூஸ் ரீடராச்சே இவங்க..’ என்று பொறி தட்டியிருக்கும்..யெஸ்..சன்...

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகாவுக்கு சாதனை விருது!

0
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது. தமிழ்த் திரைத்துறை, மற்றும் சின்னத் திரை உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா...