0,00 INR

No products in the cart.

நடிகர் அஜீத்தின் ‘வலிமை’ படம் ரிலீஸ் : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நடிகர் அஜீத் குமாரின் நடிப்பில் போனி கபூர் தயாரித்த வலிமை படம் இன்று அதிகாலை உலகெங்கும் ரிலீஸ் ஆனது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அஜித்குமார் நடித்த வலிமை படத்தின் முதல் காட்சி சென்னையில் அதிகாலை 4 மணிக்கு ரோகிணி தியேட்டர் மற்றும் காசி தியேட்டரில் திரையிடப்பட்டது.
3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்பு வெற்றிகரமாக வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் வலிமை. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நேர் கொண்ட பிரிவை’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. அதே இயக்குநருடன் மீண்டும் அஜித் குமார் நடிக்க உருவானது தான் வலிமை திரைப்படம். படம் தொடங்கி 2 வருடமாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அஜித் படத்துக்கு அப்டேட் கேட்டு ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

குறிப்பாக ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர், இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகள், ஐ.பி.எல். போட்டிகள் என பல இடங்களில் வலிமை பட அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்தனர்

இதனையடுத்து படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் காட்சிகள் வெளியாகின. அஜித் பைக் சாகசத்தில் ஈடுபடும் சண்டைக்காட்சிகளை கொண்ட இந்த ட்ரெய்லர், எதிர்பார்ப்பை பன்மடங்காக்கியது. இறுதியாக வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து பட வெளியீட்டை தள்ளி வைத்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து, வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

சென்னையில் ரோகிணி, காசி ஆகிய திரையரங்குகளில் காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவு முதலே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். தியேட்டர் முழுவதும் கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்தனர். தியேட்டரில் வெடி வெடித்து பட வெளியீட்டை கொண்டாடினர். அஜித் வரும் பைக் ரேசிங் காட்சிகளுக்காகவும், யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காவும் எதிர்ப்பார்ப்புடன் திரைப்படம் காண வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் வலிமை படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கியான்வாபி மசூதி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள கியான்வாபி மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், அங்கு வழிபட அனுமதிக்கக் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை...

அசாம் கொட்டித் தீர்த்த கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!

0
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மற்றும் அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது....

#Breaking: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

0
காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி டெல்லி,மும்பை சென்னை...

‘ஸ’-வுக்கு மாற்று எழுத்து கண்டுபிடியுங்கள்; தமிழக அரசுக்கு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை சவால்!

0
தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை முன்னிட்டு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ‘எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே’ என்று தன் டிவிட்டர் பக்கத்தில்...

எல்ஐசி பங்கு விற்பனை: பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இழப்பு!

0
இன்று பங்குச் சந்தையில் எல்ஐசி-யின் பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்ததாவது: இன்று தேசிய பங்கு சந்தையில் முதல் நாளாக...