உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்: தலைநகர் உட்பட பல இடங்களில் குண்டுமழை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்: தலைநகர் உட்பட பல இடங்களில் குண்டுமழை!

உகரைன் நாட்டைக் கைப்பற்றும் வகையில் அந்நாட்டு எல்லையில் ரஷ்யா தன் போர்படைகளை குவித்து வந்தது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, ரஷ்ய போர்ப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கு வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எற்கனவே தனது 2 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்  என அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com