0,00 INR

No products in the cart.

ஜோதிஸ் என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல

அருள்வாக்கு

கார்த்திகை தீபம்

‘மாதங்களுள் மார்கழி மாதமாக நான் இருக்கிறேன்’ என்று பகவான் கீதையில் சொன்னாலும், அதற்கு முன் மாதமான கார்த்திகை மாதத்திலேயே பகவானுடைய பூஜை கார்த்திகை மாதமே உகந்த மாதமாக ஆகிறது. கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் ஸ்நானம் செய்வது மிகவும் உகந்தது. அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம். ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.

கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் மிக மிக விசேஷம். அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு. இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரச மரமாக நான் இருக்கிறேன் என்றார்.

மேலும் கார்த்திகை பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்து சமயத்தில் விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைவருக்கும் கை, கால் முதலிய உருவங்கள் உண்டு. ஆனால்
சிவலிங்கத்திற்கு கை, கால் முதலிய உருவங்கள் கிடையாது. லிங்க வடிவமாகவே இருக்கும். லிங்கம் என்றால் காரணம். லிங்காகாரமாக உள்ள பரமேச்வரன் உலகனைத்திற்கும் பெரும் பேறான முக்தி அளிக்கக்கூடிய ஞானத்தையும், உபதேசிக்கக்கூடிய காரணமாக இருப்பதனால் லிங்கமாகவே பரமேஸ்வரன் விளங்குகிறார். சிவம் என்றாலே மங்களம். நல்லவை என்று பொருள். பரமம் என்றால் உயர்ந்தது. பரம மங்களங்களுக்குள் உயர்ந்தது பரமசிவம். இந்த பரமசிவன் ஜோதி வடிவமாக இருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பஞ்ச பூத ஷேத்திரங்களுள் (ப்ருதிவி க்ஷேத்திரம் காஞ்சிபுரம், ஜலக்ஷேத்திரம் திருவானைக்கா, தேஜஸ் க்ஷேத்திரம் திருவண்ணாமலை, வாயு க்ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி, ஆகாசக்ஷேத்திரம், சிதம்பரம்) ஜோதி க்ஷேத்திரம் திருவண்ணாமலை. ஜோதிஸ் என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி. இப்படிப்பட்ட க்ஷேத்திரம் திருவண்ணாமலை.

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம். பரமேஸ்வரனும் லிங்கோத்பவ மூர்த்தியாக அடி முடி காணாத ஜோதி வடிவமாக இருப்பதாக அறிந்து கொள்கிறோம். கார்த்திகை தீபம் ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட்டு, விசேஷமாக ஜோதி ஒளியுடன் வீடுகளும், கோவில்களும் விளங்குகின்றன. குழந்தைகளெல்லாம் மாவெலியோ மாவெலி என்று மஹாபலி சக்கரவர்த்தியின் தானத்தையும், பக்தியையும் எடுத்துக்காட்டும் வகையில் தீப்பொறி பறக்கவிடுகிறார்கள்.

புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும் ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு பிரார்த்தனை செய்வார்கள்.

ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க லோகத்திற்குச் செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆகவே, கார்த்திகை மாதம் ஸ்நானம், தானம், பூஜை, பிரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருவது. எனவே, விசேஷமான மாதமாகிறது.

1 COMMENT

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,590SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

மழையால் ஓர் உபயோகம் எனக்கு நடந்திருக்கிறது.

சுஜாதா தேசிகன்                                             ...

85 நிமிடங்களுக்கு அமெரிக்க அதிபர்

0
- ஹர்ஷா   அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக வயதான அதிபராகப் பொறுப்பேற்றவர் ஜோ பைடன்தான். அவர் கடந்த 2019 டிசம்பரில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவர் நல்ல உடல் நலத்தோடு...

உங்கள் குரல்

0
“பள்ளி திறந்ததால் படு உற்சாகத்தைக் குழந்தைகள் பெற்றுள்ளனர்“ என்று நினைக்கும்போது மகிழ்ச்சி தித்திப்பாய் இனிக்கிறது. ’பாரதி மணியின்’ நல்ல பண்பை  கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட சுஜாதாதேசிகருக்கு வாழ்த்துகள். - து.சேரன்.  ஆலங்குளம் “அணையின் வலிமை’ என்பது...

“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

2
முகநூல் பக்கம்   "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். ’பணம்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ்  ஓவியம் : ரஜினி   "உங்க ’பேய்’ படம் பார்க்கப் போய் ரொம்பவே பயந்துட்டேன் சார்!" " ‘பேய்’ படம்னா அப்படித்தான் இருக்கும்!" "அப்படியெல்லாம் இல்லை. தியேட்டரில் நான் ஒருத்தன் மட்டும்தான் இருந்ததால ரொம்ப பயந்துட்டேன்!" - கீழை...