online@kalkiweekly.com

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்று சேர்ந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.

வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர்அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர். இப்பயணத்தின் முதல் அலுவலாக துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் சந்தித்து பேச உள்ளார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர்.

சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். முன்னதாக டெல்லியில் புறப்படும் போது தனது பயணத்தின் நோக்கங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். அதிபர் பைடனுடன் பிராந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாக மோடி அதில் தெரிவித்திருந்தார். இந்தோ பசிபிக் கடல் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து குவாட் அமைப்பின் தலைவர்களுடன் பேச உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். விமானப்பயணத்தின்போது அலுவல் சார்ந்த கோப்புகளையும் பார்வையிட்டு ஒப்புதல் அளித்ததாக ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

150 நாட்கள் பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன்!

0
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக அரசு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் ராஜீவகாந்தி...

ஐபிஎல்-2022 கிரிக்கெட் போட்டி: புதிதாக இணைந்த 2 அணிகள்!

0
ஐபிஎல் 2022 கிரிக்கெட் லீக் போட்டியில் புதிதாக  அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்துள்ளன. அந்த வகையில் அடுத்து நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய இரு அணிகளூம் போட்டிகளில் பன்ஃப்கேற்கும்...

முகமது ஷமிக்கு எதிரான பதிவுகள்: நீக்கியது பேஸ்புக்!

0
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. துபாயில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) இரவு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா –...

1 வாரகால தென் மாவட்டச் சுற்றுப் பயணம்: சசிகலா இன்று தொடக்கம்!

0
அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற்ம் வகியில் தென்மாவட்டங்களில் ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்தை சசிகலா இன்று தொடங்க்னார். அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது...

தீபாவளிக்கு ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்: புதுச்சேரி அரசு!

0
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்க அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் உதயகுமார் அனுப்பிய அறிக்கையில்...
spot_img

To Advertise Contact :