0,00 INR

No products in the cart.

30 நிமிடங்கள்; 134 வகை உணவுகள்! இல்லத்தரசியின் சமையல் சாதனை!

நேர்காணல் : சேலம் சுபா

‘அடுப்படிப் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டது அந்தக்காலம். ‘அடுப்படியிலும் சாதிக்க முடியும்’ என்று பெண்கள் நிரூபிப்பது இந்தக்காலம். காலங்கள் மாறினாலும் சமையல் என்பது இன்றும் இல்லத்தரசிகளின் சாம்ராஜ்யமாகத்தான் உள்ளது.

சமையலிலும் சாதனை செய்து பெருமிதம் அடைவோம்என்று வேகும் அடுப்புக் கனலில் முப்பது நிமிடங்களில் நூற்று முப்பத்து நான்கு வகையான உணவுகளைச் செய்துக்காட்டி, ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளார் மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி இந்திரா ரவிச்சந்திரன். வாழ்த்துகளுடன் அவரைச் சந்தித்தோம்.

எப்படி வந்தது இந்த சாதனைக்கான வித்து?

ணவரின் பணி நிமித்தம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலில் பல ஊர்களுக்குச் சென்று வசிக்கும் நிலை. குஜராத், மும்பை, டெல்லி இப்படி பல ஊர்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள உணவு வகைகளை ருசித்த அனுபவம். தற்போது கொரோனா காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருக்கிறோம். பொதுவாகவே, வேகமாக சமைப்பது என் பழக்கம். வீட்டில் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஸ்நாக்ஸ் வகைகளையும் வித்தியாசமான சமையல் வகைகளையும் துரிதமாகச் செய்துத் தருவேன்.

இந்திரா ரவிச்சந்திரன்

வீட்டில் இருந்த என் கணவர் இதைப் பார்த்து அசந்து போனார். இவ்வளவு வேகமாக உன்னால் எப்படி சமைக்க முடிகிறது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டவர், ‘உனது இந்தத் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் தரணுமேஎன்று பிள்ளைகளுடன் ஆராய்ச்சியில் இறங்கினார். அந்தத் தேடலில் பலரின் சமையல் சாதனைகளை அறிந்தோம். அவற்றை முறியடிக்கும் வண்ணம் என் சமையல் அமைய வேண்டும் என்ற முயற்சியில் அவர்தான் என்னை இதில் இறங்க வைத்தார். இப்படி வந்ததுதான் என் சாதனைக்கான துவக்கப்புள்ளி.

அது மட்டுமின்றி; நான் பிறந்து வளர்ந்தது சுமார் இருபது பேர் கொண்ட கூட்டுக் குடும்பம். சித்தப்பாக்கள், அவர்களின் குழந்தைகள், நாங்கள், அத்தைகள் என எந்நேரமும் எங்கள் வீட்டுச் சமையலறை பரபரப்பாகவே இருக்கும். என் அம்மா மகேஸ்வரி சமையல்ல படு எக்ஸ்பெர்ட். எத்தனை பேர் என்றாலும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன் சுறுசுறுப்பாக சமைத்து அசத்துவார். பள்ளியில் பயிலும்போதே, சிறு சிறு வேலைகளை என்னையும் செய்யச் சொல்வார். என் அம்மா உடல் நலமின்றி படுத்தபோது, அவர் சொல்ல சொல்ல சித்தி பிரேமாவதியுடன் மண்ணெண்ணெய் அடுப்பிலும் விறகு அடுப்பிலும் சமைத்த அனுபவம் என்னை மேலும் பக்குவப்படுத்தியது.

திருமணமானதும் என் அத்தை துர்காவும் சின்ன மாமியார் காமாட்சியும் கற்றுத் தந்த கைப்பக்குவங்கள், நான் எது செய்தாலும் பாராட்டிச் சாப்பிடும் என் குடும்பம்இப்படி சமையல் என் வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்து சாதனை செய்யும் எண்ணத்தை ஊட்டியது.

சாதனை என்று முடிவெடுத்தபின் அதற்கான முயற்சிகளாக என்ன செய்தீர்கள்?

சுமார் மூன்று மாதங்கள் கடும் முயற்சி... முந்தைய சாதனையை முறியடிக்க முப்பது நிமிடத்தில் எண்பத்தி ஏழு உணவுகளை சமைத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால், நான் நூறு உணவுகளை சமைக்க நினைத்து, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். எந்நேரமும் இதே நினைவுதான். எதைச் செய்யலாம்? எப்படிச் செய்தால் நேரம் குறைவாகும் இப்படிஆரம்பத்தில் முப்பது நிமிடத்தில் 36 உணவுகளே சமைக்க முடிந்தது. பின் இடைவிடாத பயிற்சிகளின் மூலம் 50, 60 என உணவு வகைகளின் எண்ணிகையும் என் தன்னம்பிகையும் உயர்ந்தது. இறுதியில் என்னால் 30 நிமிடங்களில் 134 உணவு வகைகளைச் செய்துவிட முடியும் எனும் உறுதியும் வந்தது. என் கணவரும் பிள்ளைகளும் அவர்கள் வேலையை விட்டுவிட்டு எனக்கு சமையல் அறையை சுத்தம் செய்வதிலிருந்து, காய்கறிகள் நறுக்குவது என ஆதரவாக இருந்தது நெகிழ்ச்சியான விஷயம்.

சாதனை நிகழ்வில் சமைத்த உணவு வகைகள் என்னென்ன?

16 வகையான இட்லி, 16 வகைகளில் கொழுக்கட்டை புட்டு, 16 வகை ருசிகளில் கப் கேக்குகள், 12 வகை பணியாரம், 16 வகையான தோசை வகைகள், 10 வகை பழசாறுகள், 3 வகை சட்னி, 10 வகை ரைத்தா, 3 வகை பழ சாலட் போன்றவை. மேலும், மீன் வறுவல், ஆம்லேட், சிக்கன் கிரேவி, பஜ்ஜி, சாண்ட்விச், பாயசம், வடை இப்படி 134 வகையான உணவுகளை 30 நிமிடங்களில் போட்டியின் நடுவர்கள் முன் சமைத்து முடித்தேன்.

முப்பதே நிமிடங்களில் இத்தனையும் செய்ய முடியுமா?

போட்டியின்படி அடுப்பில் வைத்து சமைக்கும் நேரம்தான் கணக்கு. மற்றபடி காய்கறிகள் நறுக்குவது, அரைப்பது, மாவு பிசைவது, மாவு பிடிப்பது போன்ற முன்னேற்பாடுகள் அந்த முப்பது நிமிடத்தில் அடங்காது. முன்னமே அனைத்தையும் செய்து தயார் நிலையில் வைத்திருக்கலாம்.

இத்தனை உணவுகள் சமைக்க எத்தனை அடுப்புகள் தேவைப்பட்டன? உதவியது யார்?

ன்பது அடுப்புகளைப் பயன்படுத்தினேன். தயார் நிலையில் இருந்த உணவு வகைகளை ஒவ்வொன்றிலும் வெகு கவனமாக சமைத்தேன். பதற்றப்பட்டால் சாதனையை முடிக்க முடியாது என்று தெரியும். ஆகவே, மனதை காரியத்தில் மட்டும் ஒருமுகப்படுத்தினேன். அடுப்பில் மட்டுமல்லாமல்; சாலட், ரைத்தா, பழச்சாறு போன்றவற்றை நெருப்பின்றி ஒருபக்கம் தயார் செய்தேன்.

எனக்குப் பொருட்களை எடுத்துத் தரவும், காய்கறிகளை நறுக்கியும், மாவுகளைக் கலந்து தந்து அந்த நேரத்தில் பெரும் உதவியாக இருந்தது என் தம்பி ராஜசேகரின் மனைவி பாண்டீஸ்வரிதான். என் அப்பா நடராஜன் நான் செய்யும் சாதனைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கித் தந்தார். இப்படி என் குடும்பம் முழுக்க எனக்கு ஆதரவாக இருந்ததாலேயே என்னால் இந்த சாதனையைச் செய்ய முடிந்தது.

வேக வேகமாக சமைத்தால் உணவின் ருசி மாறுபட்டு இருக்குமே?

துதான் இல்லை. ருசியிலும் தரத்திலும் அதிக கவனம் செலுத்தினேன். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய சிலரே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். நான் சமைத்த அத்தனை உணவுகளையும் ருசி பார்த்ததுடன், வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.

சரி... இவ்வளவு உணவு வகைகளை சமைக்கும் உங்களுக்குப் பிடித்த உணவு எது?

வ்வளவுதான் சமைத்தாலும் ஒரு பெரிய வாழை இலையில் காய்கறிகள் கலந்த பொறியல், கூட்டு, சாம்பார், ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், பாயசத்துடன் ஒரு முழு விருந்து சாப்பிடுவதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. ஆனால், இப்போதெல்லாம் அதிகம் வாழை இலையை யாரும் பயன்படுத்துவதில்லை.

சாதித்து முடித்த பின் மனதில் தோன்றியது?

ந்த விஷயத்தையும் சாதாரணமாக நினைக்காமல், அதில் முயற்சியும் பயிற்சியும் தன்னம்பிக்கையும் இணையும்போது அதை சாதனையாக மாற்ற முடியும் என்பதே. என் பிள்ளைகள் என்னைப் பெருமையுடன் பார்க்கும்போது சந்தோஷக் கடலில் மிதந்தேன்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...