0,00 INR

No products in the cart.

மூதாட்டிக்கு காலணி: போக்குவரத்து காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை சந்திப்பு சிக்னலில் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் ஜான்சன் புரூஸ் லீ. கடந்த செவ்வாயன்று (மார்ச் 29) அன்று நண்பகலில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்

அப்போது சுமார் 80 வயது மிக்க மூதாட்டி ஒருவர் கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்புகூட அணியாமல் சிரமப்பட்டு நடந்து வந்து, அங்கிருந்த பஸ் ஸ்டாப் அருகே இளைப்பாற அமர்ந்தார். இதைக் கண்ட போக்குவரத்துக் காவலர் புரூஸ் லீ, அவரிடம் சென்று 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

அதற்கு அந்த மூதாட்டி ’’வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுகிறது.. நடக்கவே முடியவில்லை”” என்று கூறியுள்ளார். உடனே காவலர் வேறொருவரை அனுப்பி மூதாட்டிக்கு காலணி வாங்கி வரச் செய்து அவருக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டி நன்றியுடன் கைகூப்பி வணங்கிச் சென்றார்.

’’எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன்’’ என மூதாட்டியிடம் போலீசார் கூறியுள்ளார்.

இந்த செய்தியை தாம்பரம்  காவல் ஆணையர் முனைவர் மு.ரவி அறிந்து இன்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம்  காவல் ஆணையர் அலுவலகத்துக்கு காவலர் ப்ரூஸ் லீயை வரச் செய்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...