குட்டி குட்டி கத்தரிக்காய்களை நான்காக பிளந்து அதற்குள் மசாலாவை அடைத்து குக்கரில் சாதம், பருப்பு வைக்கும் பொழுது ஒரு தட்டில் மேலாக வைத்து குக்கரை மூட வேண்டும். வெயிட் போடும் முன் வெளியே எடுத்து பிறகு வாணலியில் தாளித்து வதக்கினால் மசாலா எல்லாம் வெளியே வராமல் காயில் நன்றாகப் பிடித்துக்கொண்டு சுலபமாக வதங்குவதோடு அழகாக முழு கத்தரிக்காய் ரோஸ்ட்டும் ரெடி. இதே டெக்னிக்கை உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு காப்ஸிகம் கறி செய்யவும் பயன்படுத்தலாம். -பானுமூர்த்தி