கறிவேப்பிலையை கொத்தாக வாங்கி ஈரம் போகக் காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். அதை எடுத்துப் பொடியாக பாட்டிலில் போட்டு வைக்கவும். கடுகு தாளிக்கம்போது இந்தப் பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். ரசத்திலோ, குழம்பிலோ போட்டுக் கொள்ளலாம். இதனால், கறிவேப்பிலையும் வீணாகாது. -பி. ஜெயலட்சுமி