வந்த விருந்தினருக்கு அடை செய்து தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்று யோசனை. சேமியாவை மிக்ஸியில் பொடித்து, இரண்டு நிமிடம் வேக வைத்துத் தயிரில் போட்டுக் கலக்கினேன். அத்துடன் கடுகு, தாளித்து நிறைய கொத்துமல்லி தழை போட்டுத் தந்தேன். பேரென்ன என்றார்கள். ‘சேமி தஹி கிரேவி’ என்றேன். சூப்பர்! -மஞ்சுளா கிருஷ்ணன்