0,00 INR

No products in the cart.

காலையில் செய்த சப்பாத்தி, மாலையில் உலர்ந்து, சாப்பிட ஏதுவாக இல்லையே என்ற கவலை வேண்டாம். ‘மந்திரம்’ நம்கையில்தான் உள்ளது. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தாராளமாக தடவி சப்பாத்தியைப் போட்டு, கை நிறைய தண்ணீர் எடுத்து, சப்பாத்தி மீது தெளித்து, சிறிது நேரம் திருப்பி திருப்பிப் போட்டு எடுத்தால், மெதுவான புத்தம் புது சப்பாத்தி கிடைத்துவிடும். -சி. பூங்கோதை

Previous articleஎன் உறவினர் வீட்டிலிருந்து வந்த தீபாவளி பட்சணங்களில் ரவா லட்டின் சுவை வித்தியாசமாயிருந்தது. ரவாவல்டு பிடிக்கும்போது ரோஸ் எசன்ஸ் விட்டுப் பிடித்திருந்தார்கள். சுவையும், மணமும் அபாரம். ரவா லட்டை விரும்பாதவர்கள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். -விஜயராணி
Next articleகுட்டிக் குட்டி கத்தரிக்காய் ¼ கிலோ (காம்பை நீக்காமல் நாலாக பிளக்கவும்.) பூண்டு பத்து பல், சிறு துண்டு இஞ்சி, ஐந்து லவங்கம், இரண்டு தேங்காய்பத்தை, வெங்காயம் ஒன்று, பெங்களூர் தக்காளி 2 அனைத்தையும் நைசாக அரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து கத்தரிக்காயை நன்கு வதக்கி அரைத்த மசாலா உப்பு, அரை தம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். பத்து நிமிடத்தில் தண்ணீர் ஊற்றி, மசாலா இறுகி, எண்ணெய் மேலே நிற்கும்போது இறக்கவும். சாதம், இட்லி, தோசை, பூரி அனைத்துடனும் தொட்டுக் கொள்ள மிகவும் ஜோராக இருக்கும். ஒரு துண்டுகூட செய்பவருக்கு மிச்சம் இருக்காது. -ராகினி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles