பாம்பே சட்னி செய்யும்போது கடலை மாவிற்குப் பதில் பொட்டுக்கடலையைக் கொர கொரப்பாக பொடி செய்து தூவி செய்தால் சுவையாக இருக்கும். வதக்கும்போது சேர்த்துச் செய்தால் இது குருமாவா (அ) வடைகறியா என்று கேட்பார்கள். இறக்கும்போது சிறிது கொத்தமல்லியையும் தூவி இறக்கலாம். இதன் விசேஷம் என்னவென்றால் அந்தச் சட்னி பொன்று கொழு கொழுப்பாயிருக்காது. -விஜயராணி