காப்பர் பாட்டம் பாத்திரங்களில் ஒரு சிட்டிகை டேபிள் சால்டை காப்பர் பகுதியில் பரவலாக தூவி, ரசம் குழம்பிற்கு கரைத்தபின் மீதமுள்ள புளிச் சக்கையை மேலாக அதன் மேல் தடவினாலேயே போதும், உங்கள் காப்பர் பாட்டம் கிண்ணம் பளிச்சென்று மின்னத் துவங்கும். நன்கு அலம்பிய பின் உலர்ந்த துணி ஒன்றினால் துடைத்து வைத்தால் நீண்ட நேரம் பளபளப்பாக இருக்கும். -சுமதி சிவகுமார்