வெங்காயத் தயிர்ப் பச்சடி செய்யும்பொழுது, அரிந்த வெங்காயத்துடன் சிறிது உப்புத் தூளைச் சேர்த்துப் பிசிறி வைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், வெங்காயம் சேர்ந்து நீர் விட்டிருக்கும். அத்துடன் ஒரு பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து தயிரில் கலந்தால் வெங்காயம் மிருதுவாகவும் இணைந்தும் இருப்பதுடன் பச்சடியின் மணம் வாசல்வைர வீசும். -ஏ. கஸ்தூரி