ஊற வைத்து, வேகவைத்த பயறு வகைகள் (காராமணி, கொண்டைக் கடலை) இருந்தால், அவற்றில் சிறிதளவு எடுத்து, எந்த வகையான கூட்டு, பொரியலாக இருந்தாலும் அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது போல் கலந்துவிட்டால் பார்வைக்கும் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது சுவையாகவும் இருக்கும். இதேபோல் சாம்பார் வகைகளிலும் கலந்து செய்தால் ருசியாக உள்ளது. -சி. பூங்கோதை