மைதா மாவு கரைத்த தோசை செய்யும்போது மைதா மாவும், அரிசி மாவும், சரிபாகம் கரைத்துச் செய்வோம். ஆனால் அரிசி மாவிற்குப் பதிலாக எவ்வளவு மைதா மாவு போடுகிறோமோ அதில் பாதியளவு பச்சரிசியை அரைமணி முன்பு ஊறவைத்து அரைத்து அத்துடன் மைதாமாவையும் கலந்து உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் இவற்றைக் கலந்து தோசை செய்தால் தோசை ஒட்டாமல் வருவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும். -பி.பிரேமாவதி