புழுங்கலரிசி ஒரு தம்ளர், பச்சரிசி ஒரு தம்ளர் இரண்டையும் ஊறவைத்து அதனுடன் நான்கு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து (காலையில்) சாயந்திரம் தோசையாக வாருங்கள். எண்ணெயும் அதிகம் விட வேண்டாம். சிக்கனமான ஆனால் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தோசை. -வித்யா பாலசுப்ரமணியம்