உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவைகளை வறுத்து சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். பட்டாணி, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்பொழுது உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து வாணலியில் கடுகு தாளித்து, சுண்டலைப் போட்டுத் தேவையான அளவு இந்தப் பொடியையும் மேலே தூவுங்கள். காரம், உப்பு ஒன்றாகக் கலந்து ருசியாக இருக்கும். மஹிமா