திடீர் விருந்தாளி, தயிர் பச்சடி, பாயசத்துடன் சமைக்க வேண்டிய நிலை. அன்று பார்த்து தயிரைக் காலையிலேயே சிலுப்பி மோராக்கி விட்டேன். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்புப் போட்டு, கொஞ்சம் தேங்காயைத் துருவி நன்றாக கெட்டியாக அரைத்து மோருடன் கலக்கி தக்காளிக் கலவையில் ஊற்றித் தாளித்தேன். சூப்பர் தயிர்ப்பச்சடி என்று பாராட்டுக்கள். -நிர்மலா குமார்