தோசை மாவு ஒரு கரண்டி போல் மிஞ்சியிருந்தது. அத்துடன் ஒரு கரண்டி கடலை மாவு போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை நறுக்கிப் போட்டு, தோசையாக வார்த்து, பின் அவைகளை சிறிய அளவாக நறுக்கி ஏற்கெனவே செய்து வைத்திருந்த மோர்க்குழம்பில் போட, அந்தத் தோசை மோர்க் குழம்பை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டார்கள். -பூர்ணிமா பாலன்