கிழங்கு வகைகள் வெங்காயம், வாழைக்காய், மாங்காய் வாங்கும்போது விரல்களால் சற்று அழுத்திப் பார்க்க வேண்டும். அழுத்தினால் வாங்கக் கூடாது. வெண்டைக்காயின் கூர்மையான நுனிப்பகுதியை விரலால் ஓடித்துப் பார்க்க வேண்டும். நன்கு எளிதாக ஒடிபட்டால் அவை பிஞ்சாக இருக்கும். முருங்கைக்காய் கணுக்கள் தெரியாமல் ஒரே சீராக இருந்தால் அதை மட்டும் வாங்க வேண்டும். கத்தரிக்காய் வாங்கும்போது அதன் மேலுள்ள காம்பு பசுமையாகவும், விரல்களால் அழுத்தும்போது மென்மையாகவும் இருக்க வேண்டும். -விஜயா ஸ்ரீநிவாசன்