0,00 INR

No products in the cart.

கால் தம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறிய வெந்தயத் தண்ணீரைக் குடித்தால், உடல் உஷ்ணம் நன்றாகக் குறையும். அதே வெந்தயத்தில் இரண்டு, மூன்று முறை மேலும் தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். பிறகு அந்த வெந்தயத்தை தூர எறியாமல் ஒரு செடிச் சட்டியில் மணல் பரப்பித் தூவிக் கிளறி வைத்தால் மறுநாளே வெந்தயச் செடி முளைத்துவிடும். ஜோராகக் கீரை மசியல் செய்யலாம். -சியாமளா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles