600 இடங்களில் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

600 இடங்களில் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் இன்று 2-வது வாரமாக 600 இடங்களில் சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக அமைச்சர். மா.சுப்பிர,மணீயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;
தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி பூஸ்டர் போடும் பணி நடைபெற்று வருகிறது.குறிப்பாக ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் நிரம்பியவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது, 4 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்று கருதப்பட்ட நிலையில் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று 2-வைத்து வாரமாக தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறூகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள.

-இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com