70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி: குஜராத்தில் சாதனை!

70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி: குஜராத்தில் சாதனை!

குஜராத்தில் 70 வயது பெண்மணி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் ஜிவுன்பென் ரபாரிக்கும் (வயது 70) அவரது கணவர் வல்ஜிபாய் ரபாரி க்கும் (வயது 75) திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெற விரும்பி, அங்குள்ள புஜில் ஹர்ஷ் ஐவிஎஃப் மையத்தை நடத்தும் டாக்டர் நரேஷ் பானுஷாலியை அணுகினர். இந்த நிலையில்,விட்ரோ கருத்தரித்தல்(ஐவிஎஃப்)மூலமாக ஜிவுன்பென் ரபாரி தன் 70-வதாவது வயதில் ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும், குழந்தையுடன் பெற்றோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து டாக்டர் பானுஷாலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தம்பதி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் மருத்துவமனைக்கு வந்தனர். தாங்கள் ஒரு குழந்தையைப் பெற விரும்புவதாக சொன்னபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அவருடைய வயதின் காரணமாக இது ஆபத்தானது என்று நாங்கள் அவரிடம் கூறினோம், மேலும் மூன்று மாதங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.ஆனால்,அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதனையடுத்து,கருவுற்றபோது அவரின் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.கர்ப்பகாலத்தின் எட்டாவது மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை வெளியில் எடுத்தோம். பிரசவத்தின்போது, இருதயநோய் நிபுணர் உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர். இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 70 வயதில் குழந்தை பெற்ற ஜிவுன்பன் ரபாரி கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இவ்வாறு அநத மருத்துவர் கூறினார்.இதற்கு முன்னதாக 2019-ல் ஆந்திராவைச் சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்பவர் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com