8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1-ல் திறப்பு: தமிழக அரசு!

8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1-ல் திறப்பு: தமிழக அரசு!

தமிழகப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு மற்றும் வழிபாடு தலங்கள் திறப்பு குறித்து முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மேலும் ஏற்கனவே சமுதாய, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com