0,00 INR

No products in the cart.

ஆடம்பரமாய் ஆரம்பி என்றார் என் கணவர்! ஸ்ருதி அஸ்வின் சேகர் பேட்டி!

நேர்காணல்: சாருலதா

ஆடை வடிவமைப்புத் துறையில் காலடி எடுத்து வைத்து, படிப்படியாக உயர்ந்து, இன்று மிகப்பெரிய வெற்றி பெற்று, கம்பீரமாக வலம் வருபவர் ஸ்ருதி அஸ்வின் சேகர். பிரபல நாடகக் கலைஞரும் அரசியல்வாதியுமான திரு. எஸ். வி. சேகரின் மருமகள் என்ற அடையாளத்தையும் தாண்டி தன் துறையில் சாதித்து வெற்றீ கண்டுள்ளார். அவரை சந்தித்து பேசினோம்..

ஆடை வடிவமைப்பாளர் ஆனதன் ஆரம்பம் பற்றி சொல்லுங்கள்?

சின்ன வயதிலேயே ஆர்வம் என் ரத்தத்தில் கலந்திருந்தது என்று நினைக்கிறேன். 4 வயதிலேயே என் பார்பி பொம்மைக்கு டிசைன் டிசைனா சட்டை தைத்து தரசொல்லி வாங்கிப் போட்டு அழகு பார்ப்பேனாம். பாட்டியின் பழைய புடவைகளில் பாவாடை மற்றும் ஸ்கர்ட் தைத்து ஆசையாக அணிவேன். என் திருமணத்திற்கு என் ஆடைகளை நானே பார்த்து பார்த்து வடிவமைத்துக் கொண்டேன். வித்தியாசமான என் அலங்காரம் அனைவரையும் கவர்ந்தது. நண்பர்களும், உறவினர்களும் என்னை டிசைன் செய்து கொடுக்கும்படி கேட்க ஆரம்பித்தனர். அதனால் ஒரு டைலருடன் விளையாட்டாக இந்த யூனிட்டை ஆரம்பித்தேன்

: “ஆடம்பராஎப்படி எப்போது உருவானது?

எஞ்சினியரிங் படித்து தனியார் துறையில் வேலை செய்த நான் அஸ்வின் சேகருடன் காதல் திருமணம் செய்து கொண்ட பின் வேலைக்கு செல்லவில்லை. 2012-ம் வருடம்  ஒரு நாள் என் அம்மா 12 புடவைகள் வாங்கி வந்து தந்தார். ‘’உனக்கு ஆடை வடிவமைப்பில் மிகவும் ஆர்வம் உள்ளதே, இப்போது முகநூல் (பேஸ்புக்) மூலம் எல்லோரும் வியாபாரம் செய்து வருகின்றனர் ,அது போல் நீயும் முயற்சி செய்யேன்’’ என்று சொன்னார். உடனே கணவர் அஸ்வின் ‘’ஆடம்பரமான ஒன்றை ஆரம்பித்து விடு’’ என சொல்ல, அதையே பெயராக வைக்கலாம் என யோசித்தோம். என் மாமனார் திரு. எஸ்.வி. சேகர் நியூமராலஜிபடி எழுத்துக்கள் அமைத்துக் கொடுக்க, ஆடம்பராஆரம்பமானது.

அப்போது எனக்கு பெண் குழந்தை பிறந்தாள். அவளுக்கு விதவிதமான டிசைன்களில் கவுன், பாவாடை, மாக்ஸி என தயார் செய்து அணிவித்தேன். அதைப்பார்த்து அனைவரும் கேட்க ஆரம்பித்தனர்

ஆனால் பிளவுஸ் தைப்பதில் என் முழு கவனமும் செலுத்தியதால், அதற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்க, வீட்டிலேயே இரண்டாம் மாடியில் தையல் யூனிட் வைத்தோம். ஆரம்பத்தில் ஒரு டைலரில் ஆரம்பித்து, இன்று 45 டைலர்கள் மற்றும் எம்பிராய்ட்ரி செய்பவர்கள் என உள்ளனர். மேற்கு வங்கத்திலிருந்து டைலர்களை அழைத்து வந்து தங்க வைத்தும் வேலை செய்கிறோம். வெப்சைட் பார்த்துக் கொள்ளவும் ஒரு குழுவினர் உள்ளனர்.

குடும்ப ஆதரவு எப்படி?

என் கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். ஒவ்வொருவரும் எனக்குத் தரும் ஆதரவுதான் என் இந்த முன்னேற்றத்திற்கு காரணம். வேலை செய்ய இடம் தந்து, ஒத்துழைப்பும் சுதந்திரமும் கொடுத்து என்னை ஊக்குவிக்கும் குடும்பமே என் பலம். இதுவே எனக்கு கிடைத்த ஒரு வரமாக சொல்வேன்.

உங்கள் ஸ்பெஷாலிட்டி?

பிரைடல் பிளவுசஸ்எனப்படும் கல்யாண பெண்களுக்கான  பிளவுஸ் தைப்பது. அதுவும் ஷோரூம் எதுவும் இல்லாமல் சமூக வலையமைப்பு மூலம் மட்டுமே செய்கிறோம். எங்கள் வெப் சைட்டில் உள்ள டிசைன்கள் பார்த்து ஆன்லைன் ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்களை திருப்தி செய்யும் விதமாக தைத்துக் கொடுக்கிறோம். இந்தியா மற்றும் வெளி நாடுகளில் பலருக்கு அனுப்பி வைக்கிறோம். நேரடியாக கல்யாணப்புடவை எடுத்து வந்து அதற்கென வித்தியாசமான முறையில் வடிவமைப்பு கேட்டாலும் செய்து கொடுக்கிறோம்

புடவைகளில் தஞ்சாவூர் பெயிண்டிங் செய்து கொடுப்பது எங்கள் ஸ்பெஷாலிடி. மேலும் பழங்கால ஆன்டிக் வகை பதக்கம் போன்ற நகைகள் டிசைனை பிளவுஸ் மற்றூம் புடவைகளில் செய்கிறோம். திருமணத்தில் ஒரு குறிப்பிட்ட கான்செப்ட் வைத்து செய்வது இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட்! அப்படியும் செய்து தருவோம்.

சவால்களை சமாளித்தது இருக்குமே?

நிச்சயமாக. கோவிட் சமயத்தில் என் யூனிட்டின் குடும்பத்தினருக்கும் உதவி செய்யும் நிலை ஏற்பட்டது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் சகஜமெனினும் கடந்த வருடம் முழுவதும் ஆர்டர் கொடுத்த துணிகளை சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்க சிரமப் பட்டோம். அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

வாடிக்கையாளர் தொடர்பாக பிரச்சினைகள் உண்டா?

உண்மையில் மனித மனம் எப்போது எப்படி ஆசைப்படும் என தெரியாதே?. ஒரு கலரில் ஆர்டர் செய்து நாங்கள் எம்பிராய்ட்ரி செய்து முடித்தபின், திடீரென வேறு கலரில் மாற்றி செய்துத் தரச் சொல்லிக் கேட்பார்கள். அதேபோல் ஏற்கனவே தைத்த பிளவுசில் அளவில் கூட்ட வேண்டும், அல்லது குறைக்க வேண்டி வரும்போது,

முதலிலிருந்து தைக்க வேண்டியும் இருக்கும். ஆனால் திருமணம் என்பது வாழ்வில் முக்கிய நிகழ்வு ஆச்சே?! அதனால் வாடிக்கையாளர்கள் கேட்கிறபடி மாற்றி செய்து கொடுத்துள்ளோம். கொரோனா காலத்தில் கொடுக்கல் வாங்கல் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

சுவாரசியமான சம்பவங்கள் ஏதாவது சொல்லுங்கள்!

ஒரு முறை மும்பையிலிருந்து ஒரு குடும்பத்தில் திருமணம் என்று 20 பிளவுஸ் ஐந்தே நாட்களில் தைத்துத் தரும்படி ஆர்டர் தந்தனர். அதை வாங்கிக் கொள்ள வந்தவர்கள், ஒவ்வொரு பிளவுஸாக போட்டு பார்க்க ஆரம்பித்து இரவு ஒன்றரை மணி ஆகிவிட்டது. தையல் கடையும் வீட்டிலேயே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை, குழந்தை ஒரு பக்கம் அழுது கொண்டு இருந்தாள். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்.

அதுபோல் என் இரண்டாம் குழந்தை பிரசவ நேரத்தில் நான் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் இருக்கும்போது, என் கடை மேனேஜர் ஏதோ சந்தேகம் கேட்டார். அதன்பின் என் அம்மா ‘’உன் குழந்தைஹாஜிரா’ என்று உன் மேனேஜர் பெயரை சொல்லிக்கொண்டு பிறக்க ப்போகிறது.. பார்’’ என்று சொல்லி சிரித்தார். அதே போல் அமெரிக்காவிலிருந்து ஒர் குடும்பம், நெற்றி பொட்டு முதல் மாலை வரை என்னிடம் டிசைன் செய்து கொண்டனர். திருமணத்திற்கு ஒர் வாரம் முன்னால் வந்து அனைத்தும் மனநிறைவாக செய்து வாங்கிகொண்டு சந்தோஷமாக புறப்பட்டனர்.

இன்னொரு சுவையான சம்பவம்.. என் மாமனாரும், கணவரும் ஒரு ஹோட்டலுக்குப் போனபோது, ஒருவர் வேகமாக ஓடி வந்தாராம். ‘’செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுமா?”’ என கேட்டதற்கு, ‘’அதில்லை.. உங்கள் மருமகளின் போன் நம்பர் வேண்டும்.எங்கள் வீட்டில் ஒரு திருமணம் வருவதால் அவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்’’ என்றாராம். என் கணவர் இப்போதும் அதைச் சொல்லி சிரிப்பார். உண்மையில் நான் இந்த அளவில் முன்னேறியிருப்பது என் குடும்பத்தில் அனைவருக்கும் பெருமைதான். ‘’நீ இன்னாரின் மனைவி, மருமகள் என்பதை தாண்டி, உன் சொந்த திறமை, உழைப்பால்தான் உயர்ந்துள்ளாய்’’ என்று என் மாமனார் பெருமையாக சொல்வார். இந்த குடும்பத்தில் வாழ்வது எனக்கும் பெருமையாக உள்ளது. இப்போது என் திறமையை வளர்த்துக் கொள்ள தொலைதூரக்கல்வி மூலம் எம்மில் ஒரு படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளேன். அடுத்த படி ஏறுவதற்கு தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

உங்கள் வெற்றிக்கு காரணமாக நீங்கள் நினைப்பது?

ஆடம்பரா’வில் ஆர்டர் கொடுத்தால் சரியான அளவில், சரியான நேரத்தில், கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத்தான் மூலதனமாக கருதுகிறேன். இப்போது ரெடிமேடு பிளவுஸஸ் செய்கிறோம். மிகச் சிறு அளவுமுதல் மிகப் பெரிய அளவு வரை .(32″ முதல் 50″ வரை). வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ண தயாரிப்புகள் உள்ளது.அனைத்தும் கைவேலைப்பாடுகள் {ஆரி ஒர்க்} கொண்ட ஹாண்ட் எம்பிராய்ட்ரி செய்து தயரிக்கிறோம். கை வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த முயற்சி இருக்கிறது.

சுமார் 2500 ரூ. முதல் 10000 ரூபாய் வரை அருமையான பிளவுஸ் ரேஞ்சுகள் எங்களீடம் உண்டு. பிளவுஸ் கையில் புது புது டிசைன்கள், தஞ்சாவூர் பெயின்டிங் போன்றூ புடவையிலும் ,பிளவுஸிலும் செய்கிறோம். இவற்றை பராமரிப்பதும் எளிது. வீட்டில் ஷாம்பு கலந்த நீரில் முக்கி எடுத்து அலசி உலர்த்தலாம். பாதுகாப்பதும் எளிது.விலை அதிகம் கொடுத்து ஒரு பொருள் வாங்கும் போது தரம் அவசியம் ஆயிற்றே.நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் அல்லவா

பிரபலமான வாடிக்கையாளர்?

கர்னாடக இசை பாடகி ,மஹதி, மகாநதி ஷோபனா.. ஆகியோருக்கு என் வேலைப்பாடுகள் பிடிக்கும். பிறகு குஷ்பூவிற்கு புடவை பிளவுஸ் செய்து அனுப்பி விடுவேன். இப்போது ‘ஆடம்பரா  பார் மென்’ என்று ஆரம்பித்து ஆண்களுக்கும் டிரெஸ் டிசைன் செய்கிறோம். ராஜேஷ் வைத்யாவிற்கு வீணை வரைந்த குர்தா செய்தோம். அவர் குடும்பம் முழுவதும் எங்களிடம்தான் எல்லாம் தைத்துக் கொள்வர். இப்போது கல்யாண பெண்ணிற்கு மட்டுமின்றி மாப்பிள்ளைக்கும் சேர்த்து ஒரே மாதிரி டிசைன் செய்து தருகிறோம். ஒருமுறை என் மகன், கணவர், மாமனார் மூவருக்கும் ஒரேமாதிரி டிரெஸ் டிசைன் செய்து, அவர்கள் ஒரு திருமணத்திற்கு அணிந்து சென்றபோது, அனைவரையும் கவர்ந்தது. அம்மா மகள் கான்செப்ட் என்னுடைய ஸ்பெஷல். அது போல ஒருதடவை 4 தலைமுறை பெண்கள், பாட்டி அம்மா மகள் பேத்தி என்றூ ஒரே மாதிரியான டிசைன், அவரவர் வயதிற்கேற்ப செய்தேன். மிகவும் பாராட்டினார்கள்.

உற்சாகமாக சொல்லி முடித்தார் ஸ்ருதி. .

சமீபத்தில் ‘வெட்டிங் ஒவ்ஸ்’ என்ற பத்திரிகை சிறப்பாகஆடை வடிவமைப்புக்காக தென்னிந்திய அளவில் தேர்ந்தெடுத்த மூவரில் ஸ்ருதியும் ஒருவர்.

‘’மகாபலிபுரத்தில் நடந்த விழாவில் இந்த விருதும் பரிசும் பெற்றேன்.என் கணவருக்கு சஸ்பென்சாக ஒரு கார் பரிசு வாங்குகிறேன். இதில் என் குடும்பத்தாருக்கு மிகவும் மகிழ்ச்சி’’ என்ற ஸ்ருதி, கல்கிஆன்லைன் வாசகர்களுக்கு தந்த பொங்கல் வாழ்த்தை இந்த வீடியோவில் காணலாம்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அனல் பறக்கும் அக்னி பாதை!

0
-ராஜ்மோகன் சுப்ரமண்யன் இந்திய ராணுவத்துக்கு வலு சேர்க்கும் திட்டம் என்ற வகையில் ‘அக்னி பாத்’ என்ற புதிய திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு வட மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு...

அம்மாவும் நானும்; பிரதமர் மோடி!

0
-வீர ராகவன். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் பென் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 18) தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி குஜராத், காந்திநகரில் வசிக்கும் தன் தாயின்...

கல்யாணத்தில் கலகல.. நயன் – விக்கி லீக்ஸ்!

0
-ஜிக்கன்னு. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும்இயக்குனர்  விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் என்கிற நட்சத்திர ஓட்டலில் நடந்ததில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பிடித்தன. அவற்றில் சில.....

நயன் – விக்கி கல்யாணம்.. வைபோகமே! 

0
-சஞ்சனா கார்த்திக். நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று காலையில்   மகாபலிபுரத்திலுள்ள  ஷெரட்டன் கிராண்ட் என்கிற ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்...

பர்மிங்ஹாம் வெங்கடேஸ்வரா ஆலயத்தில் வைகாசி உற்சவம்!

0
-லண்டனிலிருந்து கோமதி. பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும்; எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி; -என்ற பாரதியின் வரிகளை நினைவு கூறும் விதமாக, கொரோனா என்னும் காரிருளிருந்து விடுபட்டு விடியல்...