ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல், புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறை நாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள். எனவே, கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து நீராடி, கோயிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.