0,00 INR

No products in the cart.

ஆன்மிக முத்துக்கள்

அழுக்குத் துடைப்பம்!

ருமுறை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர், “குருவே, நமக்கு புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட பரமஹம்ஸர், “ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார்.

அதற்கு அந்தச் சீடர், “குருவேதவறு செய்பவரின் சொல்லை நாம் எப்படி ஏற்பது” என்று மீண்டும் கேட்டார்.

முகத்தில் மெல்லிய புன்னகையோடு பரமஹம்ஸர், “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது” என்று கூறினார்.

அதன்பிறகு அந்த சீடரிடம் இருந்து எந்தக் கேள்வியும் எழவில்லை.

சொல்லின் செல்வர்கள்!

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒருசமயம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது ஆடவர்கள் சிலர் அங்கிருந்து எழுந்து வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். இதை கவனித்த வாரியார் சுவாமிகள், “இந்தக் கூட்டத்தில் நிறைய அனுமார்கள் இருக்கிறார்கள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

அதைத் தொடர்ந்து அவரே, “சொல்லின் செல்வர் என்று அனுமாரை குறிப்பிடுவார்கள். இங்கேயும் சில, ‘சொல்லின் செல்வர்கள்’ இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்ல, அதை அவர்கள் கேட்காமல் போவதும் வருவதுமாக இருப்பதைத்தான் அப்படிக் கூறுகிறேன்” எனக் கூறினார். வாரியார் சுவாமிகளின் சமயோசிதப் பேச்சைக் கேட்டு அந்த அரங்கமே கர கோஷத்தால் அதிர்ந்தது.

பக்தி மார்க்கமே சிறந்தது!

றைவனிடம் செலுத்தும் பக்தி மார்க்கமே, அனைத்து மார்க்கங்களிலும் சிறந்தது. சரணாகதி, தியானம், வழிபாடு இவைதான் பக்தி மார்க்கத்தின் அடையாளங்கள். முழு நம்பிக்கையோடு இறைவனை வழிபடுவது, உள் உணர்வில் இறைவனோடே இருப்பதுதான் பக்தி மார்க்கம். சாதனைகளை உதறிவிட்டு, தன்னிடம் சரணடைபவனை அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிப்பதாக இறைவன் கூறுகிறார். விருப்பு, வெறுப்பு இல்லாமல் இறை உணர்வோடே வாழ்ந்தால் முக்தி நிலை பெறலாம். இறைவனைப் பாடுவதும், பேசுவதும், நினைப்பதுவுமே இறைவனை அடையும் வழியாய் அமையும். பூவோ, பழமோ, நீரோ எதை அன்போடு கொடுத்தாலும், அதனை இறைவன் ஏற்றுக்கொள்கிறார். பிற உயிர்களை வெறுக்காது, ஐம்புலன்களை அடக்கி, அகங்காரம் இல்லாது, இன்ப, துன்பங்களை சமமாக பாவிப்பவன் இறைவனுக்கு நெருங்கியவன் ஆகின்றான். பக்தி மார்க்கம் அனைவராலும் கடைபிடிக்க எளிதான மார்க்கம்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளியது
கே.காந்தரூபி, திருவேற்காடு

இறைவனை அறியும் வழி!

றைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன். அவனிடம் நாம் கொள்ளும் அன்பின் ஆழத்தைப் பொறுத்தே நாம் அவனை அறிகிறோம். இந்த அன்பு இல்லாமல் இறைவனை ஒருபோதும் உணர முடியாது. ஆமாம்இறைவனை அடைய தேவையானது உண்மையான அன்பே!

அன்னை சாரதா தேவி கூறியதிலிருந்து
வசந்தா மாரிமுத்து, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...