சித்தர் மலைக்கு சுற்றுலா!

சித்தர் மலைக்கு சுற்றுலா!

நானும், என் கணவரும் சுமார் இருபது வருடங்களாக யோகா பயிற்சியும், நடைப்பயிற்சியும் தினமும் செய்கின்றோம்.காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் சுடுதண்ணியும், ஐந்து பாதமும் எடுத்துகொள்வோம். பிறகு அருகில் உலக பிட்னஸ் பாத்தில் நாற்பது நிமிடம் நடைப்பயிற்சி.

விடுமுறை நாட்களில் அருகிலிருக்கும் சித்தர் மலைக்கு பேரக் குழந்தைகளோடு மலையேற்றம். நாங்கள் அடிவாரத்தில் அமர்ந்து கொள்வோம். குழந்தைகள் விரைவில் மலை எறிவிட்டு , மகிழ்சியாகத் திரும்புவார்கள். குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்யத்திற்காக இந்தப் பயிற்சியை தவறாமல் கடை பிடிக்கின்றோம். இதனால் நாள் முழுதுமே ஒரு புத்துணர்ச்சியை உணர முடிகின்றது. மாலையில் சிறிது நேரம் தோட்டவேலை, அப்புறம் யோகா என நேரத்தை எங்களால் செலவிட முடிகிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது ,மனமும் நேர்மறை சிந்தனைகளோடு அமைதியாக இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.கொரனாவிற்குப் பின், வீட்டில் அனைவரும் இரவில் உப்பு நீரால் வாயை கொப்பளித்து தொண்டையை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டோம்.

நாங்கள் பின்பற்றும் பழக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் தோழி!

-பானு பெரியதம்பி, சேலம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com